தினேஷ் சரண்யா
இன்று பேருந்து பயணத்தில் எனக்கு முன்னிருக்கையில்தான்
சரண்யாவும் தினேஷ்யும் இருந்தனர்.
தினேஷ், ஒடிசலான் அரும்பு மீசை பய..
சரண்யா, சிவப்பான, இரட்டை ஜடை புள்ள..
நான் அவர்களுக்கு பின்னால் அமர்ந்த சமயம் தினேஷ் தன் காதலை சரண்யாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தான்.
இந்த பேருந்தின் இருக்கைதான் எவ்வளவு காதல்களை கண்டிருக்கும்.
சொல்லப்பட்ட காதல்களில் எவ்வளவு வெற்றி கொண்டிக்கும்..
இந்த சரண்யாவையும் தினேஷ்யயும் போல எத்தனையோ தினேஷும் சரணயாவும் இங்கே காதலித்திருப்பார்கள்...
இந்த சரண்யாவும் தினேஷும் அடுத்த நிறுத்ததில் உள்ள பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கலாம்..
மற்ற தினேஷும் சரண்யாவும் எங்கே எப்படி இருக்கிறார்களோ..!