வலிய வந்து காதல் சொன்னால்
வலிய வந்து காதல் சொன்னால்
உண்மை காதலில்லை என
நீயாய் நினைத்து கொண்டால்
நான் எப்படி நிரூபிக்க
என் காதல் உண்மையென ??
விழிகளால் விழி மோதி
வார்த்தைகள் ஊமையாகி
கவிதைகள் பரிமாறி
இதயம் இடம் மாறும்
இதை நான் உண்மை காதலென்பேன்
உடல்கள் உரச விட்டு
பார்வையால் மேயவிட்டு
காம கணை தொடுத்து
காதல் என பெயர் வைத்து
கைகழுவும் நிலைக்கு பெயர்
எப்படி நான் சொல்ல
அதையும் காதல் என ......