தோற்றினும் முயற்சி செய்

தோற்றினும் முயற்சி செய்

தோற்றுபோய் கீழே விழுகின்றேன் என சோர்ந்து போகாதே !!
தோல்வி என்பது நிலையல்ல !!
வெற்றி என்பது எளிதல்ல !!
முயற்சி என்பது தோற்பதில்லை !!
தோல்விகள் ஒவ்வொவொன்றும் உன் வாழ்வென்னும் பட்டத்தை ஏற்றும் நூலிழைகள்
அடிவாங்கி விழுந்தாலும் விதைபோல் விழு
மீண்டும் மீண்டும் எழு !!

உன் அனுபவங்களை நெஞ்சில் உரமாக்கு
உன் தோல்விகளை ஊன்றி வேராக்கு !!
உன்னை தூரியாரின் பேச்சை வேறாக்கு
உன்னை வெல்ல ஒருவனும் இல்லையென்று !!
உன்னை தூற்றிய பகைவர் போற்றிடவே !!
உலகம் உன் புகழ் போற்றிடவே!!
இமயமதில் உன் கொடி ஏற்றிடவே !!
எழுந்திராய் மனிதா

இலக்கை நோக்கி நடந்திட்டா !!
வெற்றிக்கனியை பறித்திடடா!

எழுதியவர் : வெண்ணியம்மாள்.வே (27-Oct-14, 7:54 pm)
சேர்த்தது : வெண்ணியம்மாள்
பார்வை : 156

மேலே