மனதிலே ஒரு வலி

சுட சுட ஒரு பனித்துளி
என்றுமே உன் விழி
அருகில் நான் செல்கையில்
மனதிலே ஒரு வலி

கவிதைகள் ஆயிரம்
தந்திடும் பாத்திரம்
கருப்பொருள் என்றுமே
காதலில் நீ மாத்திரம்

சிலுவைகள் சுமக்கவா
சிறு சிறு கனவுகள்
சிதறி போவதால்
காதலால் மனரனங்கள்

சம்மதம் சொல்லிப்பார்
எதையும் நான் சாதிக்க
ஜாதிதான் குழப்பமென்றால்
எப்படி நான் வாதிக்க

எழுதியவர் : ருத்ரன் (27-Oct-14, 7:26 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : manathile oru vali
பார்வை : 82

மேலே