கருத்திலே பூத்த கவி--அபி மலேசிய என்பவரின் கவியினைத் திருத்தி ,எழுதியது
கல்மனத்தோர் கொடுமைக்குக் கிஞ்சித்தும்
----கலங்காதே உனைவதைத்தோர் மன்னிப்பை
----உளம்,நி னைத்தாய்!
கொல்கொதாவில் சிலுவையினை நீசுமந்து
----கொல்ல,நின்று பார்த்தவர்,எம் பாவமதைக்
----கொண்டு சென்றாய்!
உன்சந்நி தியிலிந்தக் கவிதையினால்
----உவகையிலே உளம்துள்ளிப் பாடியதாய்
----ஓட லாச்சே!
என்நெஞ்சம் மகிழ்ந்ததுவே இருந்தகுறை
----எல்லாமும் மறைந்ததுவே கவலைகளும்
----எங்கோ போச்சே!
முன்னின்றே இறைவன்,நீ முகங்காட்டி
----முத்திதர வாராயோ எனமனதும்
----முனகப் போச்சே!
என்னென்றே கண்ணீரை இன்னமுமே
----கவிவெள்ளம் எனத்திறந்து கொட்டிடுவேன்!
----இரங்கும் அய்யா!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

நீ ஓர்...
கவின் சாரலன்
29-Mar-2025

போகுமிடம் வெகு...
Ashok4794
29-Mar-2025
