இரகசியத் தென்றல் - சந்தோஷ்
![](https://eluthu.com/images/loading.gif)
இப்போதெல்லாம்
எப்போதோ வீசும்
தென்றல் வினோதங்கள்
எந்தன் மேனியில்
உரசி சிலாகித்து
இனிப்பு ருசியறிந்து
பசியாறுகிறது.
பாவம்.!
இதற்கு முன்
தேனீக்களின் காட்டில்
தென்றல்
சென்றதில்லையாம்..!
ஓ தென்றலே...!
எப்போதும் நான்
கெளரவ கதவடைத்து
ஆசை ஜன்னலை
திறந்தே வைத்திருக்கிறேன்.
என் மீது
யாருமறியாமல்
மெளனாய் வீசு.
சத்தமாய் காதலி.
ஆனால்
மொத்தமாய் இல்லாமல்
கொஞ்சமாய் கொஞ்சமாய்
ரசனையோடு
என்னை கொன்றுவிடு.
நான்
இன்னும் இன்னும்
வாழ வேண்டும்
வாழ்ந்தே தீர வேண்டும்.
என் கன்னித்தென்றலே...!
எப்போதாவது வந்துவிடாமல்
எப்போதும் வந்துவிடு
யாரும் சொல்லத்தயங்கும்
ஆசைகளை கவிதையாய்
தேக்கியிருக்கிறேன்
தேனீப்போன்ற என் மேனியில்....!
-இரா.சந்தோஷ் குமார்