என் தேவதையின் கவிதை - சந்தோஷ்

என் தேவதையின் கவிதை.

இசையொன்று
இசைத்திடும்
இசைகேட்டு - உன்னிதயம்
இசைந்துவிடக்கூடுமோ - யானதில்
இதம் காணலாகுமோ ?

வண்ணத்துப்பூசியென
வாலிபம்தான்
வசந்ததத்தை நாடுதே
வசப்படுமோ?

அசைவின்றி கிடந்தாலும்
சிலையழகு
அடித்துவிட்டு சென்றாலும்
அலையழகு

கடுந்தேறு
கொடுக்கெனவே - எனை
வெடுக்கேன்றுக் கொட்டினாலும்
உன் விழியழகு

உச்சிக்கிழனாக - எனை
உஷ்ணத்தில் நனைத்தாலும்
உள்ளாடும் அன்புதனில்
உயிர்குளிரச் செய்யும் - உன்
உறவழகு

கேட்கிறதா?

கண்ணனின் மறுபிறப்பே !
காமனுக்கு கலைகள்சொன்ன
கட்டழகே !

கேட்கிறதா?


உன்னிதயத் தின் வாசமெனை
இழுக்கிறதே !- என்
இளமையத னோசை
உனக்கு கேட்கிறதா?

மன்மதனின் மகுடியில்
மயக்கம்கொண்டு - என்
நாளங்கள் சலங்கையிட்டு
நாணமறந்தா டுமொலி
கேட்கிறதா?

இளமையது யாழாக
நாணம தன் நரம்பாக
இச்சைராகம் மீட்கிறேன்
இனியவனே கேட்கிறதா?

கனியொன்று
கனியாகி - உன்
கனிவாய்க்கு விருந்தாகிட
கணிவோடு அழைக்கிறதே !- என்
காந்தனே கேட்கிறதா?

இனி அணைபோட இயலாது
ஆறுதல் மொழி போதாது
கணிந்துருகும் காதல்தனை
பருகிவிட வந்துவிடு !

என் இசைகேட்கும்
திசைநோக்கி
என்னவனே வந்துவிடு !

இன்னுமென்ன யோசனை
இன்பத்தினை பகிர்ந்திடு....!


-------------------------------------------
பேனா பிடித்த
அவள் விரலைபிடித்து
நான் எழுதிய கவிதை...!

கற்பனையில்..!
கற்பனையில்.......!! :)

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (24-Oct-14, 3:44 pm)
பார்வை : 483

மேலே