மீண்டும் மீண்டும் வா
அவன் அவளிடம் சென்று
காதலை உளறினான்..
வேகமாய் மறுத்து தலை ஆட்டினாள் அவள்!
ஐந்து வருடங்களுக்கு பின் மீண்டும்
ஏற்றுக் கொள்வாயா என்னை..
என்று கேட்டான் ..
வித விதமாய் ஒலியெழுப்பி..
அவள் தலை அசைத்தாள்..!
ஒரு தலைக் காதல்..
இருவழி பாதையாக மாறியது..
சேர்ந்தான் ..
வாழ்ந்தான் ..
இறந்தான்..
மறுபடி பிறந்தான்..
அவளை மீண்டும்
கண்டான்..
காதல் கொண்டான்..
மணந்தான்..
வாழ்ந்தான் ..
இறந்தான்..
மறுபடி பிறந்தான்..
மறுபடி..மறுபடி..
மீண்டும்..மீண்டும்..
அவளோடு இணைந்தான் ..
அவன் அவளைக்
காதலிக்க ஆரம்பித்து..
ஐயாயிரம் ஆண்டுகள்
இப்போதுதான் முடிந்துள்ளது..
அவனது காதல்
அவனோ..
அவளோ..
மறுபடியும்
பிறக்காத போதுதான்
முடிவுக்கு வரும்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
