அந்த நிமிடம்

பிரிவின் தவம் கலைத்து
உன்னை பார்க்கும் அந்த நிமிடம்
வார்த்தை மௌனமாகும்
கண்ணீர் வார்த்தையாகும்..
என் நலம் நீ கேட்க
உன் நலம் நான் சொல்ல
உன்னை பார்க்கும் கனவு
நனவான சந்தோஷத்தில்
இதயம் துள்ளிகுதிக்க
இதழ்களை புன்னகை நனைக்க
இமைகள் உன்னை பார்த்தபடி
இமைக்காமல் என் நொடிகள் நகர
துடிக்காமல் என் சுவாசம் நிகழ
வசந்தம் வந்து அருகில் அமர
வாழ்க்கை வானை எட்டிபிடிக்க
கைகள் உன்னை பிடித்து
கால்கள் நலமாய்
நடைபோடும்
அன்பின் பாதையில்
அந்நாளில் உன்னோடு சேர்ந்து ....

எழுதியவர் : kk (6-Nov-13, 9:18 pm)
Tanglish : antha nimidam
பார்வை : 103

மேலே