உன்னை சிந்தித்தால்

நானென்பது நான் தானா-நான்
நானென்பது சரிதானா?
நீ என்னுள் உயிரான பின்னே-நான்
நானென்பது முறைதான?..

பூவே இந்த
தென்றல் சாட்சி கேள்!-என்
நெஞ்சில் என்றும்
உந்தன் ஆட்சிதான்-

என் கண்ணில் மின்னும்
உந்தன் காட்சி பார்!-
என் ஜீவன் எல்லாம்
உந்தன் கட்சி தான்..

எனைத் தேடியே அலைந்தேனடி
உனைக் கண்டதும் தொலைந்தேனடி

நீ தானே திறமாகக் களவாடினாய்-என்
உயிரோடு உனைச்சேர்த்து விளையாடினாய்
உளி கொண்டுதான் யென்னைச் செதுக்கிடு-உன்
உயிர் கொண்டுதான் எனைச் செய்திடு

நாளெல்லாம் நீ நினைவில் வந்தால்
கார் காலம் கண்ணே!
தீராத சோக மெல்லாம்-அட
என்னுள்ளே தீரும் பெண்ணே!

பூவோடு பேசும் சுகமே
உன்னோடு பேசக் கண்டேன்
நிலவொன்று பகல் பொழுதும்
மண்மீது உலாவக் கண்டேன்....

இமை மூட கனவாக
இமை திறக்க நிழலாக-என்
நித்திரையைத் திருடிச் சென்றவளே!!

கனவோடு மட்டும் போதாது-நீ
நிஜத்தோடும் வர வேண்டும்........


T .Nisha meharin


j .j college of engineering and technology
ammapettai
trichy 620009

எழுதியவர் : தா.நிஷா மெஹரின் (16-Nov-14, 2:11 pm)
பார்வை : 164

மேலே