தாயின் அன்பு முத்தம்
ஆராரிராரீரோ ..
அருகம்புல் போல் இவரோ ..
பூ போல பூத்தவரோ ..
புது வெள்ளி தேரிவரோ..
முத்தமிட்டா எச்சில் படும்
சைகையிலே முத்தம் இட்டேன் ..
தொட்டனச்சா தேகம் கெடும்
மயில் இறகால் பொத்திவெச்சேன் ..
உன் அழக பாத்து வானம் பூமிக்கு வந்ததென்ன ?
மை இருட்ட தொட்டு நிலா பொட்டு வெச்சு போனதெங்க ?
நீ எழுந்து நடை பழக
சூரியன கூடி வரேன் ..
கால் பதிச்சு நீ நடக்க
மேகத்தயும் பதித்துச்சு தரேன் ...
பூமி வந்த புது நிலவே
பக்குவமா தூங்குவீரோ ...
பசி வந்து கிள்ளும் முன்னே
தாய் என்னை தேடுவீரோ ...
"அம்மா " னு நீ கூப்பிடத்தான்
பொட்டச்சி நான் பொறப்பெடுதேன் ...
அய்யா உன் சொல் கேட்க நெல் எடுத்து
கீறி விட்டேன்..
வாய் வலிக்க போகுதய்யா
பேசாம பேசுவீரோ ..
கால் நோவ போகுதய்யா
மார் மீது ஆடுவேரோ ..
தூக்கம் உன் கண்ணை தொட
கண்மூடும் பனி துளியே ..
வெகு நேரம் துங்காதய்யா
காத்திருக்கு தாய் மனமே ..
பி.எ. பொறியியல் கல்லூரி ,பொள்ளாச்சி .