காதல் படுத்தும் பாடு

காதல் படுத்தும் பாடு!!!
காதல் மலரும்போது முதல்
வாக்கியம் இதுவாகத்தான் இருக்கும்..
காகிதத்தில் உன் முகம்
கவிதைகளில் உன் முகம்
கை விரல்களில் உன் முகம்
எழுது கோலில் உன் முகம்..
கண் இமைகளில் உன் முகம்
இதயத்தில் உன் முகம்
இருட்டிலும் உன் முகம்
இருப்பதில் எல்லாம் உன் முகம்..
அந்த காதல் கசந்து போனால்
என் முகமும்,உன் முகமும்
வேறு விதமாக இருக்கும்
அந்த முகத்தையே இனி..
நான் காண வேண்டாம் என்று..
கலங்கி போய் நிற்கும்.இரு முகங்கள்...
முகத்திலே ஆரம்பித்து
முகத்திலே முடிவு பெறும்
காதல் படும் பாடும்
காதல் படுத்தும் பாடும் இதுதான்...