துகிலாத நினைவுகள்
அழகே சுகமா?
உன் அழகெல்லாம் சுகமா?
அன்பே சுகமா?
உன் கோபங்கள் சுகமா?
நான் சாயும் தோள்கள் சுகமா?
எனை தீண்டும் விரல்கள் சுகமா?
சில காலம் நேரம் போக்க
நீ சொன்ன பொய்கள் சுகமா ?
உயிரே என்னை தொலைத்தேன்
உன் உயரில் என்னை அடைந்தேன்
உணர்வில் பாதி
உயிரில் பாதி
உனக்குள் என்னை கரைத்தேன் ..
நிலவாய் உன்னை நினைத்தேன்
உன் நிழலை கூட ரசித்தேன்
நிழலை தொட்டு கதைகள் பேசும்
மழலை போலே இருந்தேன் ..
காதல் என்றால் கண்ணீர் என்று
நீயும் காட்ட உணர்ந்தேன் ..
காதல் ஓயும் ;கண்ணீர் காயும்
காயம் போகதறிந்தேன் ...
பெண்ணே என் காதல் நெஞ்சம்
உன் நினைவைஎண்ணி வாடும்
நீ முத்தம் இடும் இதழ்கள் கூட
உன் சுவாசம் பட ஏங்கும் !!
பழைய காதல் நாட்கள் மீண்டும் வராதா?
நாம் பிரிந்து செல்லும் தனிமை பாதை தீராதா ?
முற்று புள்ளி பக்கம் சில புள்ளிகள் வைத்தால் ,நீளாதா?
பிரிந்து போன காதல் நெஞ்சம் மீண்டும் சேர்ந்தால் ஆகாதா..?
பெண்ணே ! பொய்யை கூட கண்ணை மூடி நம்பும் காதல் மாறாதா??
பி.எ பொறியியல் கல்லூரி .பொள்ளாச்சி .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
