என்னழகு தேவதையே

அவள்
கூடிப் பிரிந்ததொரு
இயல்பில்
விடியலின் படுக்கையிலிரு
உதிர்சருகென
மலரும்
நானுமுதிர்ந்து கசங்கி
சிதைந்து கிடக்கையில் !

மோனத் தாழிகளில்
நிறைந்து தழும்பும்
கரும்புவில் நாண் தொடுத்து
வெட்கத் திரை விரியும்
ஊடலின்
ஊற்றுக் கண்
பீறிடலில்
நனை கம்பளி
பிழி வெப்பமென
அங்கங்களி லங்கங்கிருந்து
ஆனந்தத் தானியங்கள்
உதிர்ந்து சிதற
கசியும் மகிழ்வினில்
நெகிழ்ந்து
மனம் முறுக்கிச் சுழன்று
பச்சை நரம்போடும்
தசை நார்
பெருத்த மதியின்
ஏக்கத் துளை
வாசல் வழி
ஏவப்பட்ட அம்புகளால்
வீழ்த்தடித்து சாய்ந்தவனின்

பசலையின் கடுஞ்சித்தம்
கலைக்க
அள்ளியணைத்து
உச்சந்தலை மோந்து
வீணையென மடிகிடத்தி
உயிர்த் தந்திகளிலுன்னை
அர்ப்பணித்துக்
கடன் தீர்க்க
உன் மெய்முதல் தனை
என்றென் டும்
திருப்ப முடியாதபடிக்கு
ஆயுளுக்கும்
என்னிடம் அடகுவைத்துவிடு
என்னழகு தேவதையே .

எழுதியவர் : பாலா (16-Nov-14, 1:41 pm)
பார்வை : 237

மேலே