மனதை சிதறவிடாதே

விடியல் வரும் நேரமதில்
துயரமும் துன்பமும் அழிவும் வரும்
விடியல் வரும் நேரமதில்
துயரமும் துன்பமும் அழிவும் வரும்
மனதை சிதறவிடாதே!

இலட்சிய பாதையில் செல்லும் வேங்கைகள்
நிச்சியம் விடியலை தருவார்கள்
மனதை சிதறவிடாதே!

விடியல் வர
காலங்கள் பல ஆகலாம்
ஆனால் விடியல் நிச்சயம் வரும்
மனதை சிதறவிடாதே!

தலைவனின் கையை பலபடுத்தினால்
விடியல் மிகவிரைவில் உன்னை முத்தமிடும்
மனதைசிதறவிடாதே!

தமிழனின் பலத்தை அறியாமல்
மற்றவர் கூறும் கூற்றை எண்ணி கலங்காதே
விடியல் வரும் நேரமதில்
மனதை சிதறவிடாதே!

எவரும் எம் நிலத்தை பறிக்க இயலாது
ஆளவும் முடியுமா
பதிங்கியிருக்கும் தமிழர் நாளை
இன்ப அதிர்ச்சி தருவோம்
விடியலுக்காய் கைகொடு
மனதை சிதறவிடாதே!

தேசம் வடிகின்ற காலமதில்
விடியலுக்காய் குரல்கொடு
மனதை சிதறவிடாதே!

ஈழத்தமிழர் மட்டுமல்ல உலகத்தமிழரும்
தலைநிமிர்கின்ற காலமதில்
விடியலுக்காய் உலகத்தமிழர் நாம்
இணைந்து குரல்கொடுப்போம்
மனதை சிதறவிடாதே!

அர்தமில்லாத கேள்விகளை நீயெழுப்பி
தமிழனை நீயே ஏளனப் படுத்தாதே
விடியல் வரும் நேரமதில்
மனதை சிதறவிடாதே!

மாண்டவர் கனவு
விடியும் நேரமதில்
மனதை சிதறவிடாதே!

எழுதியவர் : தா.நிஷா மெஹரின் (31-Dec-13, 12:41 pm)
பார்வை : 125

மேலே