புத்தாண்டே மலர்ந்திடுங்கள்

புத்தாண்டே மலர்ந்திடுங்கள் !

அமைதிப் பூக்களாய்
அன்பு மனிதர்களாய்
அறிவு மழலைகளாய்

ஆனந்த மனங்களாய்
ஆதரவு கரங்களாய்
ஆரோக்கிய அறிவியலாய்

என் சமூகம் மகிழ்ச்சியில் திளைத்து
தலைதோங்க !
புத்தாண்டே வீசிடுங்கள் தென்றலாய் !
என் தேசத்து இளைஞர்களின்
கனவு மொட்டுகள் மலர்ந்திட !

*** பூவிதழின் புத்தாண்டு வாழ்த்து பூக்கள் ***

எழுதியவர் : poovithal (31-Dec-13, 12:26 pm)
பார்வை : 680

மேலே