குறும்பட பாக்கள் -சந்தோஷ்
ஒரு குறும்படத்திற்காக நான் எழுதி ஒலிப்பதிவு செய்யப்பட்ட கவிதைகள் .
1)
அலைகள் தழுவும்
இன்பக் கடற்கரையில்
மயிலிறகு வருடும்
புதுசுகமாய்..
மந்திர விழியில்
சுந்தர அழகில்
மின்னல் ஒளியாய்
படபடக்கிறாள்
என் நினைவு வானில்.....!
2)
கண்ணிரண்டும் நாட்டிய நடனமாட
கையிரண்டும் அழகிய கவிப்பாட
அவள் சிரித்து பேசும் அழகு
என்னில் , முளைத்து பறக்கிறது
பட்டாம்பூச்சி சிறகு.
3)
அந்த பாரதிக்குள் பிணைந்த
கவிதைகளைப்போல
உந்தன் மித்ரனுக்குள் புதைந்த
பாரதியும் நானே..!
எனக்குள் அன்பாய் இணைந்த
காதல் கவியும் நீயே..!
------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.