போறானே போறானே

போறானே போறானே !
என் நினைவுகளை நினைவோடு தூக்கிப்
போறானேபோறானே !

வாறானே வாறானே !
போன வழி மறந்து திரும்பி
வாறானே வாறானே !

தாறானே தாறானே !
தாராளமாய் அள்ளி தன் முத்தத்தை
தாறானே தாறானே !

வேறான வேறான !
என் காதல் கவி மழையில்
வேறான வேறான !

தாரகையின் தங்க வெண்மையாம்
நம் காதல் ...

போரில் இரு கண்களின் யுத்தமாய்
நம் காதல் ....

இரத்தின சுரங்கமான தேடலாய்
நம் காதல்.....

உலகத்தின் கண்ணை மறைக்குமாம்
நம் காதல் ....

சிப்பியில் முத்தாய் நினைவுகளாய்
நம் காதல் ....

கவி மழையின் கருத்தரங்கமாய்
நம் காதல் .....

சொற்களின் ஊமையாம்
நம் காதல் .....

வன்மம் தீர்க்கும் கண்களாம்
நம் காதல் ....

மழையில் சிதறும் சிறு துரலாம்
நம் காதல் ....

தாயின் தலையணை பாசம்
நம் காதல் .....

அகத்திணையின் அகப் பொருள்
நம் காதல் ....

மணிக்கூண்டின் முடியா நொடிகளாம்
நம் காதல் ...

பூவில் தேன் வண்டாம்
நம் காதல் ....

இறைவனின் உடன்படிக்கையாம்
நம் காதல் ..

கண்களில் பணிவாம்
நம் காதல் ......

இயற்கையின் சீற்றம்
நம் காதல் ....

தீபாவளியின் தீபமாம்
நம் காதல் ...

உன்னிடம் இழந்த விழிகாளால் விழிக்கின்றேன்
விண் தாண்டி காதலோடும் என் கனவுகளோடு ....

எழுதியவர் : keerthana (20-Oct-14, 8:45 pm)
பார்வை : 70

மேலே