aharathi - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  aharathi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Nov-2013
பார்த்தவர்கள்:  443
புள்ளி:  219

என் படைப்புகள்
aharathi செய்திகள்
aharathi - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2017 3:21 pm

மூடனான இறைவன் !

உனை தாய் தாங்கி பெற்றாளா !
சொறி நாய் வயிற்றில் தங்கி வந்தாயா?
நாயின் மதிப்பும் கெட்டுப் போகும் இவ்வார்த்தையில்!
இன்னும் துளிரே விடாத தளிரையா !
சீ இழி பிறப்பே உனை இம்மண்ணும் தாங்குகிறதே!
தரை பிளந்து நெருப்புக் குழம்பாக்கி கொதிக்க வைத்தல்லவா இருந்திருக்க வேண்டும்
இ மணித்துளிக்கு உனை!

இதயம் வைக்க மறந்த இறைவன் இருக்கிறானா ?
மூடனானே உனக்கு உயிர் கொடுத்து !
நியாயமும் சமாதானமும் சவமாக ,
மனம் கொண்டவர் துடித்து துவள,
இனி ஒரு நிகழ்வு
இது காறும் நிகழாதிருக்கச் செய் இறைவா இல்லை இல்லாமலேச் செய்திடு இப்பூவுலகோடு எங்களையும் !

மன்னித்து விடு ஹாசினி 😧

மேலும்

aharathi - aharathi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2016 5:19 pmபார்த்த ஞாபகம் இல்லையோ

மனதை ஈர்க்கும் இசை, கவிஞரின் சொல் விளையாட்டு, காட்சியமைப்பின் கவர்ச்சி, நடிகர்களின் ஒய்யாரம்...  அழகு அழகு  அழகு. ....
ஆயிரம் முறைகளுக்கு மேல் பார்த்திருப்பேன்   .  நீங்கள் இதை படிக்கும் இந்த நிமிடத்திற்குள் பார்த்த  எண்ணிக்கை  இன்னும் அதிகரித்திருக்கும்.
அப்படி பிடிக்கும்.  

கிளப் ஒன்றில் சிவாஜி செழுமையான தோற்றத்துடன் கோட் சூட்டில் அமர்ந்து  இருப்பார். முதலில் அவரது பக்கவாட்டு தோற்றத்துடன் நெருக்கமாக தெரிவார். வாயில் நீண்ட  சிகரெட்  (அந்த காலத்தில் வசதி படைத்தவர்கள் உபயோகிக்கும் சுருட்டு ?! )  லைட்டரை எடுத்து பற்ற வைக்கிறார் இசை ஒலிக்க ஆரம்பிக்கிறது.  மெல்லிய வெளிச்சத்தில் அவர் வாயிலிருந்து ஊதப்பட்ட புகை ஏவுகணை சென்ற வான்வழி போல் புகை பாதை போடுகிறது பரவுகிறது.  மிடுக்குடன் அமர்ந்து பார்க்கிறார் .அப்புகையும் மிடுக்குடனே பரவும் தோற்றத்தை அளிக்கிறது சிவாஜி கணேசனின் மிடுக்கு. 
இசை டடட்டட்டட. ..டடட்டட்டட ஆறே பேர் கொண்ட  குழு அனைவரும் பெண்கள்  (ஃபுளோர் டச் அனார்கலி சுடிதார் போன்று ) பாதம் தொடும் நீண்ட கவுன் அணிந்து அசைகின்றனர் இசைக்கேற்ப நளினமாக மென்மையாக  (ஒரு பீட்டுககு பத்து ஸ்டெப்பும் அதனை முடிக்க வேண்டும் என்ற பதட்டமும் இல்லாமல் எலும்பு முறிவுக்கான முயற்சி  இல்லாமல் ) அறுவரும் நிறைக்கின்றனர் .

மேடையில் செளகார் ஜானகி நமது  அம்மா அக்கா தங்கை தோழி அணிவதைப் போன்றே பிளவுஸ் அணிந்திருப்பார் புடவை உடுத்தியிருப்பார். என்ன ஒன்று வித்தியாசமாகச் சுற்றி நவீனமாக உடல் முழுவதும் மறைக்கும் கருமை நிற உடையில் கையில் மைக்குடன்  மேடைக்கு வருகிறார். முன் தலையில் சிறிய கிரீடம் அவர் சிரிப்புடன் பளீரிடுகிறது. 
ஒய்யாரமாக சிரிப்புடன் நின்ற நிலையில் மெலிதாக உடல் முழுவதும் முன் பின் அசைக்கிறார் பாடிக்கொண்டே. ..சிறு சிறு அசைவுகள் ஒய்யாரம் புன்னகை தெளிந்த நீரோட்டமான  இசை நம்மை உள் இழுத்துச் செல்லத் தொடங்கி விடுகிறது.

தலைவரோ  (சிவாஜி ) ஆழ்ந்து இழுத்து புகையை இரசித்து விடுகிறார். அது பழையபடி  ஏவுகணை வழித்தடமாக மாறுகிறது. பல்வேறு  இசைக்கருவிகள் இசைக்கலைஞர்கள் மேடையில் இருந்து இன்பமாக்க. ..
நீலநதிக்கரையோரம் பற்றி நாயகி பாடுகிறார் அசைவுகளோடு குழு அழகாய் திட்டமிட்ட  நடன  அசைவுகளை கொடுக்கிறது ரம்மியமான மேடை. 
பாடிக்கொண்டே உடலைச் சற்று பின் சாய்த்து முன் விரைந்து  செல்கிறார் நாயகி . சென்று மேடையின் மறுபுறம் இருந்து வருகிறார்.

பழகி வந்த சில காலம்  மறக்கையில்... தலைவர் மதுக்கோப்பையை நாகரிகமாக  உதட்டிற்கு கொடுக்கிறார். உதடும் பாத்திரமேற்கிறது  வெளிச்சிந்துகிறது  இரசனையை   .  பார்வை மாறுகிறது  ஈர்க்கப்பட்டு வாய் திறந்து இரசிக்கிறார்  சிரிக்கிறார்  சுட்டுவிரல் வாயில் வைத்து கடிக்கிறார்  கவர்கிறார் பெரிய  மோதிரம் ஒளி வீசுகிறது அதைவிட அவர். .....
மறந்ததோ நெஞ்சம் என்று நாயகி மேடையின் ஒரு புறம் சென்று மறுபுறம் வருவதற்குள் தலைவர் தடுமாறுகிறார் தேடுகிறது பார்வை வாயில் சிகரெட்டுடன். ..இசைக்கருவிகள் பொழுதை இனிமையாக்க குழு அழகூட்டுகிறது அருமையாக.

நாயகி இரவையும் நிலவையும் கேட்கச் சொல்கையில் குழுப்பெண்கள் அறுவரும் இருவர் இருவராக மூன்று பிரிவாக பிரிந்து இசைக்கேற்ப ஆடுகின்றனர். ஹய்ய்யோ தலைவர் வெட்கச்சிரிப்பொன்றை வீசிக்கொல்கிறார்  அட்டகாசம் !  சிகரெட் புகையுடன் பரவுகிறது சிரிப்பும். ...
குழுவினர்  இணைந்து அசைந்து மகிழ்விக்கின்றனர் நேர் கோடாக மலராக  என்று. ...
நிலவு சந்திப்பு குறித்து பாடுகையில் கொஞ்சலும் சிரிப்புமான முகபாவத்தை அளித்து நடனம் பார்த்த நிறைவை அளிக்கிறார் செளகார்ஆடாமலே. ..

தலைவர் நாயகியை பார்வையாலும் மதுவை வாயாலும் பருகிக் கொண்டிருக்கிறார் .  இசை கொஞ்சம் உச்சஸ்தாயியில் ஒலிக்க குழுவினர் வட்டமாக நின்று  கைகோர்த்து விரைந்து சுற்ற செளகார் இரு கைகளையும் இரு புறமும் நீட்டி சற்றே குனிந்து சபை மரியாதை அளித்து முடிக்கிறார்.

அதற்குள் பாட்டு முடிஞ்சிடுச்சா என்ற  ஏக்கத்தை ஒவ்வாரு முறையும் அளிக்க வல்ல பாட்டு இது.

அகராதி

மேலும்

aharathi - aharathi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Nov-2016 10:55 pm

அன்பு கண்மணி,

நீ நலமாக இருப்பதாக நேற்று உன்னை பார்த்து வந்த  அப்பா கூறினார் மிகவும் மகிழ்ச்சி.  நீ நலமாக  இருப்பதை விட நிம்மதியோ நிறைவோ வேறெதுவும் தந்து விட போவதில்லை எனக்கு.  நாங்களும் நலம். சிறகு விரிக்கும் இளமையில் காலடி வைத்திருக்கிறாய் . பருவ காலம் வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் உகந்த காலம் கண்ணே.

என்னடா அம்மா இப்படி கூறுகிறாளே என்றெண்ணாதே . நீ உலகின் முக்கிய சக்தியான 'பெண்'.  நீ பெண்ணாக பிறந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கும் உன் அப்பாவிற்கும்.  உனக்கு பெயர் வைக்க போட்டி போட்டு சிந்தித்தோம் எங்களின் சக்தியாக இருக்கும் உனக்கு சக்தி  எனும் பெயரே பொருத்தமானதாக இருக்கும் என்று தேர்வு செய்தோம். எங்க சக்திடா நீ.

இருக்கும் விநாடிகளை அப்படியே ஏற்றுக்கொள்.  எதிர் வர  இருக்கும் பொழுதுகளைக்  கொண்டாடு..  மகிழ்வு மட்டுமல்ல துக்கமும் சேர்ந்தே கொண்டாட  கற்றுக் கொள்.  அதுவாகவே மாறி விடு தெளிவு பிறக்கும். என்றும் குழப்பமான மனநிலை வைத்துக் கொள்ளாதே. நண்பர்களை போற்று. நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நான் இங்கு நண்பர்கள்  என்று கூறியது ஆண் ,பெண் ,திருநங்கை  அனைவரையும்தான் .

நான் வளர்ந்த நாட்களில் எனக்கு  ஆண்  என்பது வேற்றுக்கிரகவாசியாக  உணர்த்தப்பட்டது. வெளி உலக சிந்தனையோ , பரந்த  அறிவோ,  ஆண் பற்றிய புரிதலோ துளியுமின்றிதான் நான் திருமண வாழ்வில்  அடியெடுத்து வைத்தேன். உடல் மன ரீதியிலான எந்த தெளிவும் இல்லை.  இதனால் சில சிக்கல்களும் , சங்கடங்களும் காலங்களோடு கடந்து சென்றது. உனக்கு  அந்நிலை வேண்டாம் என் கண்ணே.  நீ உன் உடலை முழுமையாக உணர்ந்து கொள்.  
மனதை குப்பைக் கூடையாக்காமல் வரும் துன்பங்களை வலிகளைக் கடந்து விடு. அவற்றை பாடமாக வைத்துக் கொள். 

வசந்த காலம் தொடங்கி விட்டது.  வசந்த கால காற்றும் பூக்களும் உன்னை பிரதிபலித்துக் கொண்டே இருக்கின்றன.  உன் நண்பர்களுக்கும் உன்னைச் சுற்றியுள்ள உலகிற்கும் நீ ஒரு சக்தியாகவே இருந்திடு.  உனது,  உன்னுடையது மட்டும் என்று  உயிர்களிடத்தில்  உரிமை,  ஆசை கொள்ளாதே அன்பு மகளே நீ அன்பு செலுத்தும் உயிர் எதுவாயினும் நலம் பெற்று சிறப்பாக வாழ்ந்திட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் கொண்டு பழகிடு.  உனது நட்பு அனைவருக்கும் மதிப்பு மிக்கதாகவும்,  எளிமையானதாகவும்,  இணக்கமானதாகவும் இருக்க வேண்டும்.

உனது மாதவிலக்கு சுழற்சியில் தொடரும் வலிக்கு தற்போது என்ன சிகிச்சை எடுத்துக் கொண்டாய்?  இதற்கு  இயற்கை முறையில்  ஆன மருந்து பற்றி  உன் நண்பன் பரிந்துரைத்ததாகக் கூறினாய்.  அவன் கூறிய மருந்து பற்றி  எனக்கு  எழுது நான் இங்குள்ள சித்த வைத்திய சாலையில் விசாரித்து கூறுகிறேன்.

ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பில் காலடி வைத்திருக்கிறாய்.  பாடங்களை விரும்பி புரிந்து மகிழ்வான மனநிலையில் படி.  மதிப்பெண் குதிரையில் ஏறி பயணிக்காதே. 
உன் நண்பர்கள்  அனைவரையும் விசாரித்ததாகக் கூறு. 
உங்கள்  அனைவருக்கும் எனது அன்பும் ஆசியும்.

அன்பு முத்தங்களுடன்
        உன்    அம்மா

பின்குறிப்பு : இங்கு நீ வைத்த ரோஜாச்செடி பூத்திருக்கிறது. ரோஜாக்களுடன் நாங்களும்  உன் வரவை எதிர் நோக்கி. ..

அகராதி 

மேலும்

aharathi - எண்ணம் (public)

aharathi - aharathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2016 8:33 am

பால்யத்தின் வீதிகளில் நடக்கையில்
என் வீதியில் நிலா பயணித்தது என்னுடன். 
பெரும் கர்வமும் மகிழ்வும் உண்டாக  உரைத்தேன் உடன்பிறந்தவளிடம்.  அவளோ தன்னுடன் மட்டுமே பயணிக்கக் கூடியது நிலவென்கிறாள். மனம் வாடி   திரும்பி பார்த்துக் கொண்டே திசை மாறி நடக்கிறேன் நிலா வருகிறது  என்னுடன் எனில் இது பொறுக்காத சகோதரி பொய்தானே சொல்லுகிறாள்.
உறுதியும் மகிழ்வுமாக வாதிடச் செல்கிறேன் வாதிட்டு  இருவரும் ஒரு முடிவுக்கு வந்தோம்
அதன்படி ஆளுக்கொரு திசையில் நடக்கிறோம் வைத்த கண் வாங்காமல் நிலாவை அழைத்துக் கொண்டு 
இரண்டு பேருடனும் பயணித்த நிலவை அறியா நாங்கள் தன்னுடன் வந்ததாக அவரவர் வாதத்தில் மூழ்குகிறோம் .........

மேலும்

அன்பும் நன்றியும் 02-Nov-2016 10:54 pm
சண்டைகளும் அழகானது காலம் கடந்து செல்லும் நேரங்களில்...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Oct-2016 6:13 am

20-Sep-2016 5:28 pm

முன் அறிவிப்பு ஏதுமின்றி
முன் அனுமதியுமின்றி
நம் கண்கள் அறிவித்துக்
கொண்டண
முதலில் யார் என
இதழ்கள் குறும்பை கொப்பளிக்கின்றன கண்ணின் மணிகள் வைரமென மின்னி சந்திப்பதும் மீள்வதுமாக ஒளி கூட்டுகின்றன
சின்னச்சின்ன பேச்சுகள் பெயரளவில் நம்மிடையே பகிரப்படுகிறது இதயங்களோ பகிரங்கமாக துடிக்கிறது நான் நீ என போட்டியில்
ஆம் இறுதியில் யார்தான். .
யாருக்குத் தெரியும்
இதழ்கள் மொழி இதழ்களே அறியும்

மேலும்

இதழ் மொழியில் புது மொழி அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2016 9:23 am
அருமை... 20-Sep-2016 6:05 pm
aharathi - aharathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2016 5:44 pm

கடந்து வந்தேன் கடந்து வந்தேன் என்று கால் புதைய புதைந்து கொண்டே இருக்கிறாய்
சிறகுகள் இருப்பதாய் சிந்தனைகளோடு மோனையும் எதுகையும் கொண்டு படிமங்களை படிய விடுகிறாய்
உன் சிறகுகளோ உன்னிடத்தில் இல்லை
புலமை தேங்கிடாமல் அழிக்கும் வலிகளிலிருந்து வெளிப்பட்டு சராசரி பாதையையும் வாழ்ந்திடத் துடிக்கும் உன் மனம் கேள்
சிறகு பெறு சிந்தை மாற்று தேடிச்சென்று தெளிந்த முடிவெடு தொங்கிக் கொண்டும் ஏங்கிக் கொண்டும் இருப்பதல்ல வாழ்க்கை

மேலும்

நன்றி 20-Sep-2016 5:06 pm
உண்மைதான்..வானம் இருந்தும் பறக்க முடிவதில்லை அதை போல் வாழ்க்கையும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Sep-2016 10:49 pm
aharathi - aharathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

17-Aug-2016 10:18 am

மறத்தல் இயல்புதான்
பறவைகள் சிறகுகளையா

மேலும்

மகிழ்ச்சியான நன்றி 27-Aug-2016 12:27 pm
நன்றி 27-Aug-2016 12:27 pm
அருமை.... 17-Aug-2016 10:43 am
இரண்டவரியில் ஆணி அடித்ததுபோல் ஒரு அழுத்தமான கேள்வி. அருமை 17-Aug-2016 10:32 am

21-Aug-2016 11:35 am

ஏமாற்றமும் வலியும் கண்ணீரும் வருத்தமும் வலிந்து ஆட்சி செய்தது போதும் இனியொரு கவலை வேண்டாம்
திரும்பவுமா எதிர்பார்ப்பை விதைத்து ஏமாற்றத்தை அறுவடை செய்வது
வேண்டாம் தோழனே கட்டளைகளும் கட்டுப்பாடுகளும் உரிமைகளும் உறவுமுறையும் இல்லாமல்
சுதந்திரம் தடுக்காது சுற்றும் பூமி சுற்றி மகிழ்வோம் வா நீ நீயாக நான் நானாக

மேலும்

நன்றிப்பா 27-Aug-2016 11:53 am
அழைக்கும் வார்த்தைகள் மனதுக்கு புரிந்தும் கண்கள் தான் விடை சொல்ல முடியாமல் தவிக்கிறது.. 21-Aug-2016 1:21 pm
நன்றி நன்றி 21-Aug-2016 12:01 pm
சிறப்பு...இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்.. 21-Aug-2016 11:43 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (98)

கங்கைமணி

கங்கைமணி

மதுரை
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
பட்டினத்தார்

பட்டினத்தார்

தென் துருவம்
சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல

இவர் பின்தொடர்பவர்கள் (99)

இவரை பின்தொடர்பவர்கள் (99)

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே