பால்ய வீதி
பால்யத்தின் வீதிகளில் நடக்கையில்
என் வீதியில் நிலா பயணித்தது என்னுடன்.
பெரும் கர்வமும் மகிழ்வும் உண்டாக உரைத்தேன் உடன்பிறந்தவளிடம். அவளோ தன்னுடன் மட்டுமே பயணிக்கக் கூடியது நிலவென்கிறாள். மனம் வாடி திரும்பி பார்த்துக் கொண்டே திசை மாறி நடக்கிறேன் நிலா வருகிறது என்னுடன் எனில் இது பொறுக்காத சகோதரி பொய்தானே சொல்லுகிறாள்.
உறுதியும் மகிழ்வுமாக வாதிடச் செல்கிறேன் வாதிட்டு இருவரும் ஒரு முடிவுக்கு வந்தோம்
அதன்படி ஆளுக்கொரு திசையில் நடக்கிறோம் வைத்த கண் வாங்காமல் நிலாவை அழைத்துக் கொண்டு
இரண்டு பேருடனும் பயணித்த நிலவை அறியா நாங்கள் தன்னுடன் வந்ததாக அவரவர் வாதத்தில் மூழ்குகிறோம் ...........
நிலாக்காலமது.
அகராதி. ..