கவிதை 132 செல்பி எனும் மோகம்

காலதேவன் பழியேற்கமாட்டான் என்பதனால்
சித்திரகுப்தன் அவரைப்பார்த்து வினவினான்
பொழுதெல்லாம் கைபேசியில் மூழ்கிக்கிடக்கும்
இளைஞன் உயிரை எப்படியெடுப்பதென்று?

இதற்கா உனக்கு வழிதெரியவில்லை
வண்டியில் தலைக்கவசமில்லாமல் செல்லும்போது
காதலியை தவறியமணி கொடுக்கச்சொல்
இல்லையேல் இருக்கவேயிருக்கிறது நம்ஆயுதம்

வரும்வாரம் நண்பனோடு விடுமுறை
கழிக்க கொடைக்கானல் வருகிறானாம்
எப்படியும் செல்பி எடுப்பான்
பார்த்துக்கொள்ளலாமென முடித்தார் காலதேவன்!!!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (12-Oct-16, 10:46 am)
பார்வை : 228

மேலே