ஏக்கம்
நீலவானில் உலாவரும் இளங்காற்றின் வழியே
நீ எனக்கு அனுப்பும் இனிமையான காதலை...
எனைத் தேடிக் கொண்டுவரும் விட்டில்பூச்சி
எனைக்கடந்து செல்லும்போது...
அதன்பின்னே ஓடிச்சென்று பிடித்துவிட்டேன்
எனது கைகளில் ஒட்டிக்கொண்டது உனது காதல்...
மழைகாலத்தில் பனிபொழியத் துவங்கும்
இந்த மாலைப் பொழுதினில்....
வெண்மையாய் வெடிக்கத் துவங்கும்
யாரோ ஒருவருடைய பருத்திக்காட்டில் ஒரு மூலையில் நின்றபடி
உன் பெயரை உரக்கக் உச்சரிக்கின்றேன்...
எனை மெல்லத்தவழும் மேகங்களிலும்
கிள்ளத்துவங்கும் கொசுக்களிலும்...
நிறைந்து காணப்படுகின்றன
நமதான காதலின் மிச்சங்கள்...