மன்னித்து விடு ஹாசினி

மூடனான இறைவன் !

உனை தாய் தாங்கி பெற்றாளா !
சொறி நாய் வயிற்றில் தங்கி வந்தாயா?
நாயின் மதிப்பும் கெட்டுப் போகும் இவ்வார்த்தையில்!
இன்னும் துளிரே விடாத தளிரையா !
சீ இழி பிறப்பே உனை இம்மண்ணும் தாங்குகிறதே!
தரை பிளந்து நெருப்புக் குழம்பாக்கி கொதிக்க வைத்தல்லவா இருந்திருக்க வேண்டும்
இ மணித்துளிக்கு உனை!

இதயம் வைக்க மறந்த இறைவன் இருக்கிறானா ?
மூடனானே உனக்கு உயிர் கொடுத்து !
நியாயமும் சமாதானமும் சவமாக ,
மனம் கொண்டவர் துடித்து துவள,
இனி ஒரு நிகழ்வு
இது காறும் நிகழாதிருக்கச் செய் இறைவா இல்லை இல்லாமலேச் செய்திடு இப்பூவுலகோடு எங்களையும் !

மன்னித்து விடு ஹாசினி 😧

எழுதியவர் : அகராதி (8-Feb-17, 3:21 pm)
சேர்த்தது : aharathi
பார்வை : 86

மேலே