நாட்டு நடப்பு

பூர்வீக யுத்தம் பேரிருள் கீறும்
ஒளி வாளென்றிருக்கையில் தந்திரதேசங்களின் ரசாயனச்சிந்தலில் நாங்களும் இருளானோம்

ஆனை திரட்டி போர்கொண்ட வம்சம்
ஆளுக்கொரு திசையில் கேளிக்கையில் விருந்தானோம் ,வெட்கம் சுடவில்லை

ரத்தம் சிகப்பென தெரிந்திருக்கையில்
எம் கண்ணீர் முட்டைகளில்
புதிய வரலாறு கருக்கொண்டிருந்தது

சொந்தவீட்டில் பந்தமற்ற இனம்
பாட்டனின் பனைமரங்களறுத்து
அரன் செய்திருக்க அழுகையோடு அகிம்சையுற்றோம் வேறென்னஇயலும்!

எம்அழுகையின் முதலீட்டில் ஆட்சிகண்டவன் அமைதியுற்றல் குலத்துரோகத்தின் உச்சம்

ஒரு குவளை குளிர்பானத்தில் முடிந்ததாயும் தீர்வுகள் திறக்குமென்றும் புகைப்படமெடுத்து பிரபல்யம் கொள்ளும் அரசியல் சாணக்கியம்
ஆக எங்களின் எதிரி நாங்களே

உணவு திறந்த உச்சத்தில்
உயிர் தனக்கான உடலுண்ணபுறப்பட்டபின்
அவர்கள் இறந்ததாய் கணக்கு வைத்துக்கொள்வோம் அப்போதும் எங்கள் சாமியறையில் காலணிகளின் சப்தம் கேட்கும்

பரிதாபம் நம் பரஸ்பரம்


(கோப்பாபுலவுக்கான கோபம்)

எழுதியவர் : அர்த்தனன் (8-Feb-17, 10:46 am)
சேர்த்தது : அர்த்தனன்
Tanglish : naattu natppu
பார்வை : 99

மேலே