எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஊருக்கு ஒதுக்குப்புறம் ஒரு, வீடு...! வீட்டின் நடுவே, அலங்கரித்து...

 

ஊருக்கு ஒதுக்குப்புறம் ஒரு, 
வீடு...! 
வீட்டின் நடுவே, 
அலங்கரித்து வைக்கப்பட்ட, 
உயிரற்ற உடல்...!! 



இறந்தவனுக்கு சொந்தமோ... 
ஒரு வீடு...! 
ஒரு ஏக்கர் நிலம்...!! 




அதை, 
பிரிக்க வந்தவர்களோ... 
பத்து பேர்...! 



இந்த சண்டை... 
ஒருபுறம் இருக்க, 
உடல் சுடுகாட்டை நோக்கி... 
பிரயாணித்தது...! 




இறந்தவனின்... 
தந்தை ஒரு சாதி...! 
தாய் ஒரு சாதி...!! 



தந்தை வழியில், 
எரிக்கவேண்டுமாம்...! 
தாய் வழியில், 
புதைக்கவேண்டுமாம்...!! 



இந்த பிரச்சினை, 
முடிவுக்கு வர...! 





எந்த சாதி சுடுகாட்டில், 
எரிக்கவேண்டும் என்று... 
ஒரு பிரச்சினை...!! 




ஒரு வழியாக, 
அனைத்து சடங்குகளும்... 
முடிய...!! 




பிணம் எரிப்பவனுக்கு, 
பணம் யார் தருவார் என்று... 
ஒரு பிரச்சினை...!!! 

இத்தனை பிரச்சினைகளுக்கு, 
நடுவே உறங்கும் ஆத்மாவிற்கு.... 
நாம், 
வைத்த பெயர் 


"பிணம்" 



பிரச்சினைக்கும், 
காரணமானவர்களுக்கு 
நாம், 
வைத்த பெயர் "மனிதன்" 








இதில் யார் பிணம்...??   

பதிவு : selvaravi87
நாள் : 2-Apr-16, 5:49 pm

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே