எட்டையபுரத்து முண்டாசு கவிஞன்
எட்டையபுரத்து கவிஞன்
அவன்!
யாரும் எட்டாத கவிஞன்
அவன்!
தமிழை நாவில்
சுமந்த அக்காலத்திலே
இதயத்தில் சுமந்து சுவாசித்தவன்!
தமிழை எண்ணெய் எனவும்
வார்தைகளை திரி எனவும்
மறு உருவம் தரித்து
கவிதைகளாக பெற்றெடுத்து
உலகிற்கு தத்துக்கொடுத்து
தீச்சுடரென ஓளிரவிட்டான்!
தேனை மட்டுமே
உண்ணுமாம் தேனீ
அவன்
தமிழை மட்டுமே
உண்ணும் ஞானி!
வெள்ளைத்தோல்களை உரிக்க
தன் அணு அளவு சிந்தனைகளையும்
உரித்தெடுத்தான் கவிதைகளாக!
ஆயுதம் ஏந்திய போராட்டங்கள்
அவன்!
கவிதைகளில்
அவன்!
தேன் சிந்தும் வரிகளை
கண்டபோதெல்லாம்
வான் சிந்தியிருக்கக்கூடும்
மழையை!
அவன்!
கவிதைகள் நெருப்பில் புனையப்படா
தங்கம்!
அவன்!
கவிதைகள் இடிமுழக்கமிட்டு தூறா
சாரல்!
அவன்!
கவிதைகள் மேனிக்கு வளி
கொண்டு வந்து சேர்க்கா
தென்றல்!
அவன்
கவிதைகள் தமிழை
முத்தமிட்டு கொண்டனவா?
இல்லை தமிழ்
அவன்
கவிதைகளை
முத்தமிட்டு கொண்டனவா?
இல்லை தமிழும் கவியும்
இரு இதழ்களாய் அவனை
முத்தமிட்டுக் கொண்டனவா!
மலர்களை விரும்பிடாத
மங்கையர் உண்டோ!
அழகுகளை விரும்பிடாத
காளையர் உண்டோ!
முக்கனிகளை சுவைத்திடாத
நாவும் உண்டோ!
அவன்!
கவிதைகளை சுவைத்திடாத
தமிழன் உண்டோ!
அவன்!
முண்டாசு கவிஞன்!
முண்டாசு
தமிழ்த்தாய் அவனுக்கு
சூடிய கீரிடம்
எட்டையபுரத்து கவிஞன்
அவன்!
யாரும் எட்டாத கவிஞன்
அவன்!