நான் பிறந்த நாளில்
கடமைகளும், கஷ்டங்களும், சூழ்ந்திருக்க"
பணிச்சுமைகளும், தாக்கங்களும் தள்ளியே நிற்க"
வரவுகளோடு, செலவுகளும், சேர்ந்தே வந்து சேர"
ஏதோ ஒன்றை நோக்கி ஓடி கொண்டிருக்க..............,
இதோ வந்து விட்டான் என் இளவரசன்^
இனி எனக்கென்ன கவலை என,
என்னை அள்ளி அனைத்து,
எண்ணற்ற முத்தங்கள் தந்த என் தந்தை!
இன்று அதில் ஒன்றாவது கிடைக்காத என,
வரமிருகும் ஆசை புதல்வன்!