உயிர்நிகர்த் தமிழே - ரகு

மேதகு மொழியே
.......மெல்லிய நடையே
சாதகம் தேடா
.......சாதனைத் தமிழே
வேதமே விடியலே
.......வல்லினக் கலையே
நாதமே ஸ்வரமே
.......நாவினிக்குஞ் சுவையே!

இன்னிசைக் கடலே
.......எளியுரைத் தீவே
இன்னமு தூறும்
.......இயல் இசைப்பாவே
அன்னமே அழகே
.......அளபெடைத் தருவே
விண்ணதன் உயர்வே
.......உயிர்நிகர்த் தமிழே !

ஆழ்நிலைச் சுகமே
.......ஆழிப் புகழே
ஏழ்கடல் அளவும்
.......இலக்கணப் பெறிதே
பாழ்படப் பரவும்
.......பிறமொழி வியக்க
வாழ்வுறுந் தமிழே
.......வாழிய வாழியவே !

எழுதியவர் : அ.ரகு (30-Oct-14, 3:49 pm)
பார்வை : 327

மேலே