வெல்வோம் வெல்வோம்

ஆணவம் பெரிதாய் ஆடிடும் மனிதா
*****ஆத்திரம் விடுடா -இதைகேளு!
***ஆண்மையின் பொருளும் ஆருமே அறியும்
*****ஆளுமை இலைடா -அதைவீசு!
மானமும் மனமும் மாபெரும் கொடையாம்
*****மாளிகை பணமும் -தருமோடா ?
***மாசறு குணமே காசுடன் கலந்தால்
*****மானிடம் மகிழும் -உணரேண்டா!
வான்தரும் மழைபோல் வாரி வழங்கி
*****வார்த்திடும் கருணை -உயர்வேதான்
***வாழ்க்கையின் பொருளை வா!தினம் புரிந்து
*****வாசனை கமழத் -திகழ்வோம்நாம் !
ஊனமாம் பிரிவு ஊரதின் அழிவு
*****ஓட்டிடு துரத்து ! - இணைவோமே!
***ஊழலை எரித்து ஓங்கிடும் புதுமை
******ஊக்கமாய் வளர்த்து -சிறப்போமே

எழுதியவர் : அபி (1-Nov-14, 10:59 am)
பார்வை : 151

சிறந்த கவிதைகள்

மேலே