வானில் பறக்கும்

வானில் பறக்கும்...
05 / 10 / 2024.


கண்ணும் கண்ணும் காணும் பொழுதில்
விண்ணும் மண்ணும் வியந்தே நோக்கும்
பெண்ணும் நானும் இணையும் நேரம்
வண்ணம் கூட்டி வாழ்வை நிரப்பும்
எண்ணம் பொங்கி ஏட்டில் நிரம்பும்
கிண்ணம் நிரம்பி தேனாய் வழியும்
கன்னம் கனிந்து கனியாய் சிவக்கும்
சின்னம் பதித்து சிணுங்கிச் சிரிக்கும்
கன்னல் பொழுதில் கனவுகள் மறையும்
எண்ணப் பறவை சிறகை விரிக்கும்
ஜன்னல் திறந்து வானில் பறக்கும்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (5-Oct-24, 8:11 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : vaanil parakkum
பார்வை : 7

மேலே