ஒடுங்கியே நான் சாகிறேன்

ஒடுங்கியே நான் சாகிறேன்....
05 / 10 / 2024

குருடனின் பார்வை கொண்டு
வண்ணங்கள் தீட்டுகிறேன்.
ஊமையின் வாய்மொழி கேட்டு
காவியத்தை படைக்கிறேன்.
விண்மீனை பிடித்து வந்து
மாலையாக கோக்கிறேன்.
நடையிழந்த கால்கள் கொண்டு
நர்த்தனங்கள் புரிகிறேன்..
வலுவிழந்த கைகள் கொண்டு
சிலையொன்றை வடிக்கிறேன்.
நரம்பறுந்த வீணை கொண்டு
நாதத்தை மீட்டுகிறேன்.
முறிந்துபோன குழலை கொண்டு
பூபாளம் இசைக்கிறேன்.
எக்குத்தப்பாய் புள்ளிகள் இட்டு
கோலமொன்றை வரைகிறேன்.
அந்தரத்தில் வீட்டை கட்டி
அவளோடு வாழ்கிறேன்.
பிள்ளைகள் மூன்றைப் பெற்று
பேர்வைத்து மகிழ்கிறேன்.
ஒருதலையாய் காதல் செய்து
ஒடுங்கியே நான் சாகிறேன்

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (5-Oct-24, 6:48 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 4

மேலே