அபிக்கூ

புதுவகையில் இலகுவாக புதியவர்களும் சந்தம் பாடும் வகையில் நானே வடிவமைத்தது ....இந்த முறையில் இங்கு முயற்சி செய்யுங்கள் .. திருத்துகிறேன் ... நன்றிகள் ... கீழே வெறும் உதாரணமே !

மயங்கும் மனத்தின்
கவலை அழிக்க
மதுவினைக் குடித்தேன் -பின்
தெருவினில் படுத்தேன்

மயக்கம் தெளிய
மனதும் திருந்தி
எழுந்துநான் நடந்தேன்-நேற்று
விழுந்துஏன் கிடந்தேன் ?

பணம்தான் செலவு
பெறுவது இழப்பே
மனதினால் வெறுத்தேன் -பிறர்
சொனதினால் குடித்தேன்

எழுதியவர் : அபி (29-Oct-14, 1:53 pm)
பார்வை : 70

மேலே