மௌனம் பேசினால்

எனது பள்ளி நூலகத்தில் "மௌனம் பேசினால்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தைக் கண்டேன் அந்த சொல் என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு இந்தப் பதிவு:

நெடுநாள் நெஞ்சில்
பூட்டிய வார்த்தைகள்
விடுகணை என்றே
விரைந்து பாயும் !

அமைதிக் காலம்
அகன்றே மனதும்
சுமை ஒன்று இறக்கிய
உணர்வில் சாயும் !

மூடிக் கிடந்த
அகம் என்னும் வீட்டில்
பாடிப் பறக்கும்
இன்பப் பறவை !

கோபம்; சோகம்;
வெட்கம்; சிறுமனஸ்
தாபம் நீங்கிட
நல்வழி யாகும் !

துயில்கொண்ட நாவும்
தூக்கம் விழித்து
ஒயிலாய்ச் சொற்களின்
அம்பலம் ஏறும் !

சாது மிரண்ட
காடு என உள்ளம்
மோதும் ! மொய்க்கும் !
முழுதாய் மாறும் !

மௌனம் பேசுகையில்
இத்தணை நேரும் !
ஔடதம் இன்றி
மனங்களும் ஆறும் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (28-Oct-14, 10:31 pm)
Tanglish : mounam pesinal
பார்வை : 338

மேலே