சுகமேதான்

கவலை மனதை அறுத்தாலும்
தடைகள் வழியை மறித்தாலும்
துயர்கள் துரத்தித் தொடர்ந்தாலும்
வறுமை வறுத்து எடுத்தாலும்
பிணியும் விடாது வதைத்தாலும்
மதியும் குழம்பித் தவித்தாலும்
படிப்பில் கவனம் சிதைந்தாலும்
தொழிலில் பிடிப்பே குறைந்தாலும்
எழுத்தில் லயித்தால் சுகமேதான் ...!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Nov-14, 10:45 am)
பார்வை : 129

மேலே