பட்ட மரம்

குடும்ப கூட்டுக்குள்ளே மரமாய் இருந்திட்டாள்
உறவுக் கிளையாய் வளர்ந்து அன்பை பகிர்ந்திட்டாள்
சமுதாயம் தழைக்க கனிகளை தந்திட்டாள் - கட்டியவனுக்கு
காதலை தந்து காலமெல்லாம் காத்திட்டாள் ............!

வளர்ந்த கிளையில் இருந்த பறவைகள் கனிகளை
தின்று வேரு மரத்துக்கு தாவிப் பறந்தன -கட்டியவனோ
காலத்தால் கவரப் பட்டு காணாமல் போனான்-சதையும்
ரத்தமுமாய் தழைத்து வாழ்ந்தவள் இன்று தளர்ந்து போனாள்

தள்ளாத வயதினிலே தடுமாறி தடுமாறி
தளர்ந்துப் போன தாயவளும் தவமாய் கிடக்கின்றாள்
தவிக்கவிட்டுப் போன தங்க மக்களும் ஒரு நாள்
தளர்ந்துப் போய் தவிக்கும்போது தாவி அணைத்து
தங்க மடி தந்து தாங்கிப் பிடித்திடவே.........................!

காஞ்சிப் போன காட்டு மரமாய் இன்று
பெண் இனம் சமுதாயத்தில் காணாமல் போனதம்மா
பட்ட மரத்தை பட்டு மரமாய் மாற்றிட -சுயநலமான
பிள்ளைகளே ...! அன்புக் கரம் கொண்டு அணைப்பீர்களா ...?

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (2-Nov-14, 10:33 pm)
Tanglish : patta maram
பார்வை : 242

மேலே