காந்தி நோட்டின் உணர்வுகள்

என் பெயர் பணம்
நானென்றால் அனைவர்க்கும் மனம்
நான் தேவைக்கு மீறினால் கனம்
பிறகு வருந்த வேண்டும் தினம்
என்னை கொடுத்துபார் தானம்
பிறகு அடைந்துடுவாய் ஞானம்

நாடு முழுவதும் என் பாய்ச்சல்
வீடு முழுவதும் என் காய்ச்சல்

நான் பிறந்தது ரிசர்வ் பாங்கில்
என்னால் பலர் இருப்பது சென்ட்ரல் ஜெயிலில்

தேச தந்தை என் profile picture
தேச துரோகிகள் என்னால் out of the picture

சூதாட்டத்தில் மறைவேன் பொய்யாக
தொண்டாற்றுவதில் உதவுவேன் மெய்யாக

நான் விரும்புவது நாட்டில் முன்னேற்றம்
அதை பார்க்கவிடாமல் அரசியல் ஏமாற்றும்

அரசியல்வாதிகள் கையில் இருந்தால் நான் கருப்பு
ஏழைகள் கையில் இருந்தால் அது எனக்கு சிறப்பு

என்னை பகிர்ந்து கொடுத்தால் கிடைக்கும் பாராட்டு
என்னை அடைய நினைத்தால் நடக்கும் பலதிருட்டு

செத்தா வைப்பாங்க ஒரு ரூபாய் துட்டு
நான் ஏழுமலையானுக்கு பிடிச்ச பெட்டு

கோவில்களும் என்னை பெற்றுக்கொள்ளும் பாவங்களை தீர்க்க
கோர்ட்டுகளும் என்னை பெற்றுக்கொள்ளும் குற்றங்களை நீக்க

என்னை உலக வங்கி தத்துகொடுக்கும் நாட்டை முன்னேற்ற
என்னை பாதியில் பிடுங்கி கயவர்கள் நாட்டை ஏமாற்ற
என்னை வீங்கவைத்து,விலைவாசி உயர்ந்து நாட்டில் தீப்பற்ற
என்னை சேரவிடாததால் வறுமை பிடியில் ஏழைகள் வயிர் வற்ற
என்னை பதுக்குவதற்கே மாறி மாறி ஆட்சிகள் சுற்ற
என்னை தயவு செய்து பயன்படுத்துங்கள் நாட்டை புதுமையாக மாற்ற..........


ஆசான் ராஜா

எழுதியவர் : ஆசான் ராஜா (8-Aug-14, 5:51 pm)
பார்வை : 155

மேலே