பாரதம் அன்றும் இன்றும்

அன்று அரசியல் தியாகிகள் நாட்டை மாற்றினர் சுதந்திரமாக
இன்று அரசியல் வாதிகள் நாட்டை ஏமாற்றுகின்றனர் தந்திரமாக

அன்று தியாகிகள் கிடந்தனர் பாடியாக திகார் சிறையில்
இன்று நாம் கிடக்கின்றோம் ஜோடியாக கடற் கரையில்

அன்று சுதந்திரம் அடைந்தோம் தியாகிகள் முயற்ச்சியில்
இன்று ஆனந்தம் அடைகிறோம் நாயகிகள் கவர்ச்சியில்

அன்று நாடு சென்றது அறிஞர்கள் பாதையில்
இன்று நாடு செல்கின்றது இளைஞர்கள் போதையில்

அன்று 60 வயதில் சுதந்திரம் வாங்கித் தந்தார் காந்தி
இன்று 16 வயதில் குடித்துவிட்டு எடுக்கின்றான் வாந்தி

அன்று வெற்றி அடைந்தோம் நாட்டின் ஒற்றுமையால்
இன்று வெறி அடைகின்றோம் சாதி மத வேற்றுமையால்

அன்று நாடு முழுவதும் போக்கவேண்டியது பஞ்சம்
இன்று நாடு முழுவதும் போக்கவேண்டியது லஞ்சம்

அன்று ஓடினோம் வயிற்றை நிறைக்க தொழிற்சாலைக்கு
இன்று ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க கடற்கரைச்சாலைக்கு

அன்று அரசியல் கட்சிகள் நின்றது நாட்டு மக்களுக்கு துணையாக
இன்று அரசியல் கட்சிகள் நிற்கிறது நாட்டு மக்களுக்கு விணையாக

அன்று ஒற்றுமைக்காக வீதியெங்கும் ஒரே புரட்சி
இன்று வேற்றுமைக்காக வீதியெங்கும் ஓர் கட்சி

அன்று நமக்காக

தலைவர்கள் நடத்தினர் யுத்தம்
தியாகிகள் சிந்தினர் இரத்தம்
விதவைகள் அழுகைச் சத்தம்
இறுதியில் பெற்றோம் பாரதமாதாவின் முத்தம்
இதையெல்லாம் மறந்துவிட்டோமே அதுதான் வருத்தம்..............


@@@@@ 68-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தோழர்களே @@@@@


ஆசான் ராஜா

எழுதியவர் : ஆசான் ராஜா (11-Aug-14, 6:57 pm)
பார்வை : 1832

மேலே