கடனாளியாகவே இரு

கடனாளியாகவே இரு....
======================

உனக்கும் எனக்கும்
இடையேயான
அன்பு பரிவர்த்தனைகள்
மனப் பதிவேடுகளில்....

கணக்குகளை சரிபார்க்கிறேன்
சமன் செய்ய முடியவில்லை..

நீ திரும்ப செலுத்தாததால்
உன் கணக்கில் சொச்சம்...

திரும்ப செலுத்திவிடாதே
பற்றாய் வைத்துக் கொள்கிறேன்
கடன் கணக்கில் நிரந்தரமாய்...

அடுத்த பிறவியில்
கடனை வசூலிக்க
என் கணக்கில்
இனி ஜென்மமில்லை
நான் கடைசி பிறவியில்...

என்றாவது ஒரு நாள்
என் இறப்பு செய்தி
உன் செவி எட்டலாம்

அன்று
எனக்காக நீ
ஒரு துளி கண்ணீர் சிந்து
கணக்கு தீர்ந்துவிடும்...

எழுதியவர் : சொ.சாந்தி (9-Nov-14, 8:15 pm)
பார்வை : 161

மேலே