வகுப்பறை
நல்லதோர் செய்தித் தந்து - நல்
நட்பினைப் பெற்றுத் தந்து - நல்
நாகரிகத்தைக் கற்றுத் தந்து
நாளைய சமுகத்தின் தொழிற்சாலை!
திறமைகளைக் கொண்டவனைப் பட்டை
தீட்டிய வேலாய் எட்டுத்
திசையலும் வெற்றிப் பெறச்செய்யும்
திண்ணையாய் நாடெனும் வீட்டின்!
சாதி மதம் வேறுபாடுகளை
சட்டையில் ஒன்றுப்படுத்திய நல்ல
சமுகத்தை உருவாக்கும் ஒரு
சம்மனங்கால் பயிற்சி அரங்கம்!
மாற்றங்கள் எத்தனை வந்தாலும்
மாறிய மக்கள் கூட்டத்தில்
மழலைகளுடன் இன்றும் வகுப்பறை
மாற்றங்கள் உருவாக்கும் மாறதக்கருவறையாய்...!
ஏ.ரா.தினேஷ்பாபு
நான்காம் ஆண்டு கணினி பொறியியல்
நாலெட்ச் பொறியியல் கல்லூரி
சேலம்