தங்கம் ஆகிய "த"கரம் தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி...
தங்கம் ஆகிய "த"கரம்
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?
முற்றிலும் "த"கர எழுத்துக்களை மட்டும் கொண்டு எழுதப்பட்ட வெண்பா.காளமேகப் புலவரின் வார்த்தை விளையாட்டின் விளக்கம்
வண்டே,
தத்தித் தாது ஊதுதி – தத்திச் சென்று (மலர்களில் உள்ள) மகரந்தத்தை ஊதுகிறாய் / குடிக்கிறாய்
தாது ஊதித் தத்துதி – குடித்தபின் மீண்டும் தத்திச் செல்கிறாய்
துத்தித் துதைதி – ’துத்தி’ என்று ஒலி எழுப்பியபடி அடுத்த பூவைத் தேடிப் போகிறாய்
துதைது – அடுத்த பூவுக்குச் சென்று
அத்தாது ஊதுதி – அந்தப் பூவின் மகரந்தையும் குடிக்கிறாய்
தித்தித்த தித்தித்த தாது எது? தித்தித்தது எத்தாதோ தித்தித்த தாது? - நீ இதுவரை குடித்த பூக்களில் / மகரந்தங்களில் மிகவும் இனிப்பானது எது?
நன்றி :தினம் ஒரு பா தனிப்பாடல் (காளமேகம் )