பிரபு பரமராஜ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பிரபு பரமராஜ் |
இடம் | : பனையன்குறிச்சி,அம்பாசமுத |
பிறந்த தேதி | : 14-Dec-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-May-2014 |
பார்த்தவர்கள் | : 105 |
புள்ளி | : 17 |
நீ வண்ணங்களோடு
பிறந்தவளா
இல்லை
உன்னால்தான்
வண்ணங்களே பிறந்ததா.!
கோபத்தில் சிகப்பாய்..
கொஞ்சலில் மஞ்சளாய்..
ஊடலில் இளஞ்சிவப்பாய்..
கூடலில் அடர்நீலமாகும்
உன் கண்ணருந்தும்
வண்ணமாகும்
எண்ணம்தான் எனக்கு.!
பெண் விரல்பட்டு பூக்கும்
ஏழிலைப்பாலை ஆவேன் நான்.!
ஆனாலும் உன் விரல்பட்டால்
மட்டும்தான் பூப்பேன் நான்.!
உன் கன்னம்
உரசியே வண்ணமான
கைக்குட்டைகளைப் போல
என்னையும் கொஞ்சம் வண்ணமாக்கேன்.!
-பிரபு பரமராஜ்
எல்லோரையும் கடிக்கின்ற
எறும்பு
உன்னை மட்டும்
முத்தமிட்டு செல்கிறது..!
சரி
இந்த இனிப்பு மூட்டையை
தூக்கிச்செல்லத்தான் முடியவில்லை
முத்தமிட்டாவது செல்லட்டுமே..!
கண்ணாடியை பார்த்து
உன்னை அலங்கரித்து கொள்கிறாயா..!
இல்லை
உன்னை
பார்த்து கண்ணாடி அழகாகி கொள்கிறதா..!
என்பதே எனக்கு புரியவில்லை
நீ
கண்ணாடியை பார்த்து
ஒப்பனைகள் செய்யும்போது.!
தேடலின் முடிவு
நீயாக இருந்தால்
தேடிக்கொண்டேயிருப்பேன்
நான்..!
நீ போடும்
கம்பிக்கோலத்தினுள்
அகப்பட்டுக்கொண்டது
புள்ளிகள் மட்டுமா..?
நானுந்தான்..!
- இராசகோபால் சுப்புலட்சுமி
வசியத்தை
நான் கற்கவில்லை
நீ மட்டும்
கற்றுகொண்டாயெ
யாரிடம் எனை வசியம்
செய்வதற்கு...........!
மந்திரத்தை
மதுவாக்கி
தந்திரத்தை உனதாக்கி
மயக்குகிறாய்
எனை மிரட்டுகிறாய்
எனை
காதலி என்று............!
பொல்லாத
வித்தையை கற்றாயடி
பொல்லாத
வயதை
கொன்றாயடி...........!
சொல்லாத
மந்திரம் கேட்காத
மந்திரம்
உனது
காதல் தந்திரமோ..........!
கந்தர்வக்கன்னியே
எனை அழைக்காதே
எனை துரத்தாதே..........! ...........!
சொல்லாத
மந்திரம் கேட்காத
மந்திரம்
உனது
காதல் தந்திரமோ..........!
கந்தர்வக்கன்னியே
எனை அழைக்காதே
எனை துரத்தாதே..........!
கவிதை எழுதிவிட்டு
புள்ளி வைக்கின்றேன்
நான்.
நீயோ.!
புள்ளி வைத்து
கவிதை எழுதுகிறாய்
உன் வீட்டு
வாசல் முன்பு....
என்னை பற்றி
கவியெழுது என்று இதயம்
விரும்பியது...!
என்ன செய்துவிட்டேன்
எனக்கெதற்கு கவி என மூளை
விவாதம் செய்தது...!
என்ன செய்தேன் நான்...?
அனுதினமும்
அக்கிரமம் நிறைந்த உலகில்
அனுசரித்து அமைதியாய் செல்லும்
அற்ப வாழ்க்கை மட்டுமே வாழ்கிறேன்...!
கலவரங்களுக்கிடையில்
கண்களை மூடி
குருடனாய்
இருட்டினில் வாழ்க்கை...!
பிறந்தேன்...
பள்ளி பருவம் முடித்தேன்...
கல்லூரியில் நுழைந்தேன்...
வெளியேறினேன் நான்காண்டுகள் பிறகு...
வெற்றி பெற்றுவிட்டதாய்
எண்ணி கொண்டேன்...
இது வெற்றியா...???
"பகுத்தறிவு சொல்லித்தரா
ஒரு கல்வி.."
அதை கற்றதற்கு பெருமைப் படுவதா..?
இது சாதனை என்ற
நண்பர்கள் (14)

செல்வமணி
கோவை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

நிஷா
chennai
