நான் - அரவிந்த்

என்னை பற்றி
கவியெழுது என்று இதயம்
விரும்பியது...!
என்ன செய்துவிட்டேன்
எனக்கெதற்கு கவி என மூளை
விவாதம் செய்தது...!
என்ன செய்தேன் நான்...?
அனுதினமும்
அக்கிரமம் நிறைந்த உலகில்
அனுசரித்து அமைதியாய் செல்லும்
அற்ப வாழ்க்கை மட்டுமே வாழ்கிறேன்...!
கலவரங்களுக்கிடையில்
கண்களை மூடி
குருடனாய்
இருட்டினில் வாழ்க்கை...!
பிறந்தேன்...
பள்ளி பருவம் முடித்தேன்...
கல்லூரியில் நுழைந்தேன்...
வெளியேறினேன் நான்காண்டுகள் பிறகு...
வெற்றி பெற்றுவிட்டதாய்
எண்ணி கொண்டேன்...
இது வெற்றியா...???
"பகுத்தறிவு சொல்லித்தரா
ஒரு கல்வி.."
அதை கற்றதற்கு பெருமைப் படுவதா..?
இது சாதனை என்றெண்ணி
கவியெழுதி மகிழ்வதா...?
கொலைகள்...கொள்ளைகள்...
இன்னும் சில
கொடூர மிருகத்தின்
கற்பழிப்பு நிகழ்வுகள்...
என்று சகதியில் நீந்தி கொண்டிருக்கிறேன்..
இதை மாற்ற முடியா எனக்கு
கவியில் மகுடம் தேவையா...
"மூளையின் விவாதம்
சரியென்றது மனது..."
மாற்றம் வேண்டும்
என்ற எண்ணம்
எரிய துவங்கியது
என்னுள்...
"மாற்றம் பெறாமல்
மாற மாட்டேன் என்றது
மனம்.."
மாற்றம் நிகழ்த்தி
என்னைப் பற்றி
பிறர் கவியெழுத வைப்பேனா..?
இல்லை
நான் மாறி
இச்சகதியில் மிதந்தே
இறப்பேனா...!?