வண்ணமானவள்

நீ வண்ணங்களோடு
பிறந்தவளா
இல்லை
உன்னால்தான்
வண்ணங்களே பிறந்ததா.!

கோபத்தில் சிகப்பாய்..
கொஞ்சலில் மஞ்சளாய்..
ஊடலில் இளஞ்சிவப்பாய்..
கூடலில் அடர்நீலமாகும்
உன் கண்ணருந்தும்
வண்ணமாகும்
எண்ணம்தான் எனக்கு.!

பெண் விரல்பட்டு பூக்கும்
ஏழிலைப்பாலை ஆவேன் நான்.!
ஆனாலும் உன் விரல்பட்டால்
மட்டும்தான் பூப்பேன் நான்.!

உன் கன்னம்
உரசியே வண்ணமான
கைக்குட்டைகளைப் போல
என்னையும் கொஞ்சம் வண்ணமாக்கேன்.!

-பிரபு பரமராஜ்

எழுதியவர் : பிரபு பரமராஜ் (5-May-17, 12:04 pm)
சேர்த்தது : பிரபு பரமராஜ்
பார்வை : 101

மேலே