அவளும் என் காதலும்
நீ என்னை
கடக்கும் போது
தெரியவில்லை...
மிதக்கும் மின்சாரமென்று!
எங்கிருந்து
வந்தாய்....?
எனக்குள் இசை விதைத்து
சென்றாய்..!
கொஞ்சம் கொஞ்சமாய்
உயிர் கூட்டிச் சென்றாய்..!
என்னவளே..!
நான்
நானாக ஆவது
எப்போது?
உன் பிஞ்சு விரல் கோர்த்து
ஒற்றைப் பயணம் தொடர்வது
எப்பொழுது..?
நீ போன
பாதை தேடி...
என்னோட உசிரு போகுதடி...
இன்னும்
என் மூச்சுக்காற்று
உன்னையே சுற்றுதடி!
என்னை
தொடும் உன் விழி...
இதழோடு
உரசிச் செல்லும்
உந்தன் வெட்கங்கள்...
மெதுவாக
கடந்துச் செல்லும் மௌனங்கள்...
உன் உதடு வழியும்
சிறு புன்னகை...
அடிநெஞ்சினை அசைக்கும்
அசைவுகள்..!
--எல்லாம் என்மீது
மோதி விளையாடுகிறது!
எனது விடியாத
இரவுகளைக் கேள்...
தொலையாத விழிதனைக் கேள்...
மறக்காத மனதினைக் கேள்...
உடையாத நினைவுகளைக் கேள்...
இவையெல்லாம் சொல்லும்
நம் காதல் பயணங்களை...!
நம் காதல்
நினைவுகள் போதுமடி
பெண்ணே!
சொர்க்கங்கள் தேவையில்லை...
இருநூறு சொந்தங்கள்
தேவையில்லை...
யுகம் யுகங்கள் கடந்து
வாழ்வோம்...
வரும் காயங்கள் மறந்து
வாழ்வோம்...!