செல்வம் ஜெ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  செல்வம் ஜெ
இடம்:  வைகை அணை, தேனி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Apr-2017
பார்த்தவர்கள்:  237
புள்ளி:  43

என்னைப் பற்றி...

உணர்வுகளை உரக்க சொல்லும் கருத்து சுதந்திரம் கவிதைக்கு மட்டுமே உள்ளது...ஆதலால் கவிதை என் முகவரி!

என் படைப்புகள்
செல்வம் ஜெ செய்திகள்
செல்வம் ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2020 11:34 am

இதற்குமேல்
நான் எப்படி
மெய்பிப்பது மனமே

நிம்மதி மட்டுமே
உங்கள்
தேடு பொருளென்றும்

தொலைப்பதும்
தேடுவதுமே
வாழ்க்கை என்றும்

மேலும்

செல்வம் ஜெ - செல்வம் ஜெ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Apr-2020 10:49 am

"""""""""""""""'""""""""""""""""""""""'"""""""""""""""""
முட்டையின் மதிப்பு
பத்து ஆகிப்போனது
நாட்டுக்கோழி இட்டதில்
"""""""""""""""'""""""""""""""""""""""'"""""""""""""""""
அழுத்தமாக பதிகிறது
பிஞ்சுகளின் ரேகைகள்
ஆலமர விழுதுகளில்
"""""""""""""""'""""""""""""""""""""""'"""""""""""""""""
யார் வருகைக்காக கரைகின்றது?
ஊரடங்கு காலத்தில்
பட்டினிக் காக்கைகள்
"""""""""""""""'""""""""""""""""""""""'"""""""""""""""""__ஜெ.ப.செல்வம்

மேலும்

நன்றியும் அன்பும் 03-May-2020 10:39 pm
யார் வருகைக்காக கரைகின்றது? ஊரடங்கு காலத்தில் பட்டினிக் காக்கைகள் அழகு.... வாழ்த்துக்கள்... 28-Apr-2020 7:49 pm
செல்வம் ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2020 10:49 am

"""""""""""""""'""""""""""""""""""""""'"""""""""""""""""
முட்டையின் மதிப்பு
பத்து ஆகிப்போனது
நாட்டுக்கோழி இட்டதில்
"""""""""""""""'""""""""""""""""""""""'"""""""""""""""""
அழுத்தமாக பதிகிறது
பிஞ்சுகளின் ரேகைகள்
ஆலமர விழுதுகளில்
"""""""""""""""'""""""""""""""""""""""'"""""""""""""""""
யார் வருகைக்காக கரைகின்றது?
ஊரடங்கு காலத்தில்
பட்டினிக் காக்கைகள்
"""""""""""""""'""""""""""""""""""""""'"""""""""""""""""__ஜெ.ப.செல்வம்

மேலும்

நன்றியும் அன்பும் 03-May-2020 10:39 pm
யார் வருகைக்காக கரைகின்றது? ஊரடங்கு காலத்தில் பட்டினிக் காக்கைகள் அழகு.... வாழ்த்துக்கள்... 28-Apr-2020 7:49 pm
செல்வம் ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2020 2:18 pm

நாங்களும்
இறை தூதர்கள் தான்
மனிதம் பரப்பவே
மறக்காமல் வந்துள்ளோம்

நாங்கள் ஒன்றும்
சாதிகள் பார்ப்பதில்லை
மரணம் வழங்கிவிட்டே
பிறப்பை உணரச்செய்கிறோம்

இப்போதும் நினைப்பீர்கள்
கொடியக் கிருமியென்று
நாங்கள் அப்படியில்லை
உங்கள் பணத்தாசை முன்

ஆலயங்களை இப்போது
அவசரமாக தேடும் நீங்கள்
எங்கள் அன்பின் வருகையை
எவ்வாறு ரத்து செய்வீர்கள்???

மூச்சுக்காற்றை பறித்த
முக்கால்வாசி மனிதர்களே
முன்னெச்சரிக்கை முகமூடிகளை
மூடாமல் சுவாசித்து பாருங்கள்

இதயமில்லா இரும்பு மனிதர்களே
இலவசம் தானே
இதையும் வாங்கிக் கொள்ளுங்கள்
இன்னும் ஒரு
அரசியல் வியாபாரம் நடத்த

மன்னித்துக் கொள்ளுங்கள்
மறுமொழி

மேலும்

செல்வம் ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2020 2:08 pm

தனிமையை
தள்ளுபடி செய்து
காதல் வாங்கினேன்...

காதலோ என்னை
தள்ளுபடி செய்து
கனவுகளை வாங்கியது...

கனவோ தினமும்
பேரம் பேசி என்னிடம்
உயிரை வாங்கித் தொலைக்கிறது!!!

மேலும்

செல்வம் ஜெ - செல்வம் ஜெ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2020 8:57 pm

கொஞ்சம் பொறுங்கள்
மனதின் மரங்களில்
சொற்களை உதிர்க்கும் முன்
நிதானித்து உலுக்குங்கள்

எங்கேனும் எவரேனும்
மென் இதயங்கள் கீறி
மறுபடியும் ரணங்களையே
விதைக்கவும் செய்யலாம்

__ஜெ.ப.செ__

மேலும்

நன்றி அன்பரே 26-Apr-2020 9:10 am
ஆம் தாங்கள் சொல்வது சரிதான் கோபப்பட்டு நாம் உதிர்க்கும் ஒவ்வொரு சொற்களும் சிலரை தெரியாமல் காயப்படுத்தி விடலாம் நல்ல படைப்பு உங்கள் படைப்பிற்கு வாழ்த்துக்கள் 25-Apr-2020 9:00 pm
செல்வம் ஜெ - மேகலை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2018 7:27 pm

ஒரு முத்தம் கொடுக்க
இவ்வளவு வெட்கமா என
சிரித்தாள் வெண்ணிலா

நான் வேண்டுமானால்
கண்களை மூடிக்கொள்ளவா
என்றாள் மின்மினி

சுற்றி வேறுயாரவது பார்க்கலாம்
என்ற சந்தேகத்தில் பார்வையை
செலுத்தினேன் அல்லியின் மீதும்
அடக்கத்தை என்ன விலையென்று
கேட்கும் அழகியாயிற்றே அவள்

அப்படியே மணத்தால் என்னை
திருட முயற்சிக்கையில்தான்
தெரிந்து கொண்டேன் மல்லிகையும்
அருகில்தான் ஒளிந்திருக்கிறாள் என்று

எல்லோரும் என்னையே உற்றுப்பார்த்தபடி
இருக்க எனக்கு மட்டும் ஏன்
கூடிக்கொண்டே இருக்கிறது வெட்கம்
என்ற சுயசோதனையில் இருந்து
மெதுவாய் வெளிவந்து தப்பிக்கையில்தான்
என்னிடம் வசமாக மாட்டிக்கொண்டத

மேலும்

நன்றி 17-Jun-2019 3:00 pm
அருமை 16-Jun-2019 5:54 pm
நன்றி 11-Jun-2019 1:50 pm
விண்ணிலவும் பொன்னொளியில் முத்தம் ஒன்று - மேக வெள்ளாடை விலக்கியவள் என்னைக் கேட்க, என்மனதில் ஊறியெழும் ஆசைதன்னை - மீறி எப்படிநான் தருவதென்று கூசும் போது, மின்மினிதன் கண்மூடிக் கொண்டா ளஅங்கே - வாச மெல்லியலாள் அல்லிவிழி விரியப் பார்த்தாள்! தன்மணத்தால் உன்மனத்தை வெல்லும் - வ்ஞ்சி மல்லிகையும் இதழ்விரிய மலர்ந்து நின்றாள்! இன்னவர்கள் எனைச்சுற்றிப் பார்த்து நிற்க - எனக்குள் எழுந்தாடும் வெட்கத்தை மெல்ல வென்று எண்ணுகையில் முத்தாட இதயந்தன்னில் - பொங்கி இறங்கியதே தாழையெனும் காதல் காதல்! --- நல்ல கவிதைக்கு வெறும் வார்த்தைகள் தக்க பரிசாகாதல்லவா? அதனால் உங்களது கவிக்கருவினையே என் கவிவிதையாக்கி ஒரு சிறிய "பாமாலைப் பரிசு! கவிஞர் மேகலை! 08-Jun-2019 11:40 am
செல்வம் ஜெ - செந்தமிழ் பிரியன் பிரசாந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2017 10:00 am

என்னை அழிக்கும் மனிதா
உனக்கு ஏன் தெரியமறுக்கின்றது?!
நாளை நான் இன்றி
நீயும் வாழ முடியாது என்று...!

இப்படிக்கு
மரங்கள்

மேலும்

தங்களுடைய கருத்தில் மகிழ்ந்தேன்! நன்றி நண்பரே! 09-May-2017 5:10 pm
அருமை நண்பரே.... முயற்சிக்கு வாழ்த்துக்கள் 09-May-2017 11:29 am
செல்வம் ஜெ - செல்வம் ஜெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-May-2017 2:26 pm

வெட்டிவிடும்
நிமிடங்களை
ஒட்டிவிடும்
உந்தன் வருகை!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தொட்டுவிடும்
தூரங்களை
தட்டிவிடும்
உந்தன் புன்னகை!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கரைந்து விடும்
உணர்வுகளை
உடைத்து விடும்
உனது பார்வைகள்!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தள்ளிவிடும்
தனிமைகளை
மென்றுவிடும்
உனது நினைவுகள்!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
முட்டிவிடும்
வார்த்தைகளை
கட்டிவிடும்
உந்தன் காதல்!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மேலும்

செல்வம் ஜெ - செல்வம் ஜெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2017 8:31 pm

ஒரு சொம்பு
புளிச்ச தண்ணிய
குடிச்சுப்புட்டு
பொழுது விடிஞ்ச
கையோட
போக்கேத்த நாங்க
நீங்க
சோத்துல
கைய வைக்க
சேத்துல மல்லுகட்டி
மயிலக்காள ஏர்பூட்டி
வேகாத வெயில
வெதை வெதச்சு
மழை பெய்யுமுன்னு
கும்புடாத சாமி இல்ல
அழுகாத இடமுமில்ல
இது பத்தலனு
நடுச்சாமம் தண்ணிய கட்டி
எது நடந்தாலும்
ஏத்துகிட்டு
பொத்தி பொத்தி
பயிர வளத்து
நித்தம் நித்தம்
மொத்த உசிரு
அதுல கெடக்க
பேரு காலம் போல
அறுவட பாத்து
ஒத்த ஒத்த
நெல்லா
பக்குவம் பாத்து
களத்துக்கு வர்றதுகுள்ள
கொஞ்ச நஞ்ச உசுரும்
ஓய்ஞ்சு போய் உட்கார
ஒருபக்கம்
பேங்குல வாங்குன
கடன நினச்சு
கொல நடுங்கி
நடுத் தெருவுல நிக்க
எப்புடி ராசா
எங

மேலும்

செல்வம் ஜெ - செல்வம் ஜெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2017 6:35 pm

இருண்ட இதயங்களுக்கு
இதம் கொடுத்தாய்...
வறண்ட விழிகளுக்கு
வரம் கொடுத்தாய்...
முரட்டு பிடிவாதங்களுக்கு
முகவரி கொடுத்தாய்...
எல்லாம் கொடுத்தாய்
பெண்ணே!
கடைசியில் ஏன்
ஏமாற்றத்தை பரிசளித்தாய்????

மேலும்

செல்வம் ஜெ - செல்வம் ஜெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2017 10:09 pm

எனது
தடுமாறும் தவிப்புகள்
கேட்கிறது---நீ எங்கே என்று?

உன்
கடைசிப்பார்வைகள்
உளறுகிறது--நீ எங்கே என்று?

நாம்
பார்க்காத நிமிடங்கள்
துடிக்கிறது-- நீ எங்கே என்று?

எப்படிச்செல்வது
காரணம் இல்லாமல்
கடந்து போன நம் காதலை..!

மேலும்

வலிகளில் வார்த்தைகள் மௌனம் சாதிக்கிறது... வாழ்த்துக்கள் நண்பரே... 04-May-2017 3:46 pm
மேலும்...
கருத்துகள்

மேலே