இப்படிக்கு கொரோனா
நாங்களும்
இறை தூதர்கள் தான்
மனிதம் பரப்பவே
மறக்காமல் வந்துள்ளோம்
நாங்கள் ஒன்றும்
சாதிகள் பார்ப்பதில்லை
மரணம் வழங்கிவிட்டே
பிறப்பை உணரச்செய்கிறோம்
இப்போதும் நினைப்பீர்கள்
கொடியக் கிருமியென்று
நாங்கள் அப்படியில்லை
உங்கள் பணத்தாசை முன்
ஆலயங்களை இப்போது
அவசரமாக தேடும் நீங்கள்
எங்கள் அன்பின் வருகையை
எவ்வாறு ரத்து செய்வீர்கள்???
மூச்சுக்காற்றை பறித்த
முக்கால்வாசி மனிதர்களே
முன்னெச்சரிக்கை முகமூடிகளை
மூடாமல் சுவாசித்து பாருங்கள்
இதயமில்லா இரும்பு மனிதர்களே
இலவசம் தானே
இதையும் வாங்கிக் கொள்ளுங்கள்
இன்னும் ஒரு
அரசியல் வியாபாரம் நடத்த
மன்னித்துக் கொள்ளுங்கள்
மறுமொழி கூறாத மௌனவாதிகளே
ரசாயன உலகில் ரசிக்கும் உங்களை
இராப்பகலாய் என் நினைவுகளை
ஆங்காங்கே சுமக்க வைத்தமைக்கு
இப்போதும் கூறுகின்றோம்
ஒற்றுமையோடு வாருங்கள்
நாங்கள் சரணடைந்து
ஓரமாய் சென்று வதைகின்றோம்....!!!