ஒரு கிராமத்து விவசாயி

ஒரு சொம்பு
புளிச்ச தண்ணிய
குடிச்சுப்புட்டு
பொழுது விடிஞ்ச
கையோட
போக்கேத்த நாங்க
நீங்க
சோத்துல
கைய வைக்க
சேத்துல மல்லுகட்டி
மயிலக்காள ஏர்பூட்டி
வேகாத வெயில
வெதை வெதச்சு
மழை பெய்யுமுன்னு
கும்புடாத சாமி இல்ல
அழுகாத இடமுமில்ல
இது பத்தலனு
நடுச்சாமம் தண்ணிய கட்டி
எது நடந்தாலும்
ஏத்துகிட்டு
பொத்தி பொத்தி
பயிர வளத்து
நித்தம் நித்தம்
மொத்த உசிரு
அதுல கெடக்க
பேரு காலம் போல
அறுவட பாத்து
ஒத்த ஒத்த
நெல்லா
பக்குவம் பாத்து
களத்துக்கு வர்றதுகுள்ள
கொஞ்ச நஞ்ச உசுரும்
ஓய்ஞ்சு போய் உட்கார
ஒருபக்கம்
பேங்குல வாங்குன
கடன நினச்சு
கொல நடுங்கி
நடுத் தெருவுல நிக்க
எப்புடி ராசா
எங்கள மறந்திக!
கடைசியா இந்த
கோமணத் துணிய கூட
புடிங்கிகிட்டிங்க!
எவன் எவனோ
பகுமானமா வாழ
விவசாயி மட்டும்
வெட்கத்த விட்டு
வேர்வ சிந்தி
பாடுபட
போதுமடா சாமி
ஒங்க கரிசனத்துக்கு...
தாங்க மனசு இல்ல
வாழ வழியும் இல்ல
நீ ஒன்னும்
கலங்காத கண்ணு
கடசி சொட்டு
தெம்பு இருக்குற வர
உங்கள விட மாட்டேன்...
நீங்க என்ன
கை விட்டாலும்!

எழுதியவர் : செல்வம் ஜெ. (5-May-17, 8:31 pm)
சேர்த்தது : செல்வம் ஜெ
பார்வை : 295

மேலே