தாகத்தின் தவிப்பு

துன்பம் என்னும் வெறுமையில்
துயில இயலா வான்குயில்
துயரத்திலும் இன்பம் தருகிறது
தன்னை தேடிவரும் அன்பர்களுக்கு
தன் சோகம்தனை தன்னுள் மறைத்து !
தவித்திடும் மனதின் தனிமையின் ஓசை !
தள்ளாடும் நெஞ்சம்
தரணியில் தாளம்போட
தவிப்பும் தனிமையும் மாற்றி
தீயது மலராகுமோ ?
தவமது நிறைவேறுமா ?
தாகமது தொண்டையடைக்க
தவிப்பது நெஞ்சை அடைக்க,
தாயுமில்லாது தந்தையுமில்லாது
தன்னைப்போல் திரியும் பிள்ளைகளை
தங்கை அண்ணனென சொந்தம் கொண்டு
துன்பத்தை இன்பமாக்க முயற்சிக்கும்
துயரத்தின் காயங்கள் மாறிடுமோ ?
தூரிகை துருவியும் நேச நெஞ்சங்கள்
தூக்கி அணைத்து என்னை கொஞ்சியும்
துண்டாகிறேன் அந்த சிறு பிள்ளைகளைக்கண்டு
துள்ளி விளையாடும் வயதில்
துயரம்க்கொண்டு தவிக்கும் நெஞ்சிற்கு
தண்ணீர் குளிர்ச்சிபோல் சிறு மகிழ்ச்சியாயினும் தந்திடுவேன் !
தன்னிலை மறந்து அமிழ்ந்துபோகிறேன்
தரையில் நசுங்கும் மலர்போல
துளிரும்விடா சின்ன மலர்கள் வீதியில் ....
தொடரமுடியவில்லை விரல்களும் விடு என்கிறது சோகம் தாளாது ....

எழுதியவர் : ச.அருள் (5-May-17, 5:53 pm)
சேர்த்தது : சஅருள்ராணி
பார்வை : 111

மேலே