ஆம் இவர்கள் புதுமைப் பெண்கள்

கூந்தல் விரித்து
சீதையும் வருகிறாள்...
மௌனமாக
மாதவியும் வருகிறாள்!
==================================
கோலமகள் என்று
அருகில் சென்றால்...
கோபக் கணைகளை வீசாமல்...
மரபு வேலி உடைத்து
புதுமைப் பூக்கள் குலைத்து
இருட்டுவதற்குள்
அடுத்த அடைக்கலம் தேடி
அலைகின்றாள்..!
==================================
ஆம்...
இவர்கள் தான்
புதுமைப் பெண்கள்!
காதல் -- கருக்கலைப்பு
கல்யாணம் -- விவாகரத்து
ஆடை -- விளம்பரம்
ஆண்கள் -- அனாவசியம்
==================================
இவர்களை
காண ஓடோடி வந்த
பாரதி...
எழுதுகோல் உடைத்து...
கவிதை துறந்து...
கண்ணீர் வடித்து...
காணாமல் போய்விட்டார்!
ஆம்...
இவர்கள்
பாரதி காணாத
புதுமைப் பெண்கள்!
==================================குறிப்பு: சில மாதர் குலப் பெண்மணிகளுக்கு மட்டுமே...
அனைவருக்கும் அல்ல...

எழுதியவர் : செல்வம் ஜெ. (5-May-17, 5:09 pm)
சேர்த்தது : செல்வம் ஜெ
பார்வை : 93

மேலே