இவ்வளவு வெட்கமா
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு முத்தம் கொடுக்க
இவ்வளவு வெட்கமா என
சிரித்தாள் வெண்ணிலா
நான் வேண்டுமானால்
கண்களை மூடிக்கொள்ளவா
என்றாள் மின்மினி
சுற்றி வேறுயாரவது பார்க்கலாம்
என்ற சந்தேகத்தில் பார்வையை
செலுத்தினேன் அல்லியின் மீதும்
அடக்கத்தை என்ன விலையென்று
கேட்கும் அழகியாயிற்றே அவள்
அப்படியே மணத்தால் என்னை
திருட முயற்சிக்கையில்தான்
தெரிந்து கொண்டேன் மல்லிகையும்
அருகில்தான் ஒளிந்திருக்கிறாள் என்று
எல்லோரும் என்னையே உற்றுப்பார்த்தபடி
இருக்க எனக்கு மட்டும் ஏன்
கூடிக்கொண்டே இருக்கிறது வெட்கம்
என்ற சுயசோதனையில் இருந்து
மெதுவாய் வெளிவந்து தப்பிக்கையில்தான்
என்னிடம் வசமாக மாட்டிக்கொண்டது -
தாழம்பூவான காதலும்... காதலும்!.....